பாபர் மட்டுமில்ல.. ரூட், ஸ்மித்தை கூட கோலியுடன் கம்பேர் பண்ணா சிரிப்பேன்.. சச்சின் கனவு விக்கெட் பற்றியும் அமீர்

Mohammed Amir
- Advertisement -

இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி நவீன கிரிக்கெட் போட்டிகளின் ஜாம்பவான் பேட்ஸ்மேனாக அறியப்படுகிறார். 2008 முதல் இந்தியாவுக்காக 3 வகையான கிரிக்கெட்டிலும் அசத்தும் அவர் இதுவரை 26000+ ரன்களையும் 81 சதங்களையும் குவித்துள்ளார். அத்துடன் 2022 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி உட்பட இந்தியாவுக்கு விராட் கோலி நிறைய வெற்றிகளையும் பெற்றுக் கொடுத்துள்ளார்.

அப்படிப்பட்ட அவரை விட பாபர் அசாம் சிறந்த பேட்ஸ்மேன் என்று பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் அவ்வப் போது பேசுவது வழக்கமாகும். அதே போல டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியை விட இங்கிலாந்தின் ஜோ ரூட் சிறந்தவர் என்று மைக்கேல் வாகன் போன்ற அந்நாட்டைச் சேர்ந்தவர்கள் பேசுவது வாடிக்கையாகும். இந்நிலையில் இது போன்ற ஒப்பீடுகளை கேட்டு தாம் சிரிப்பேன் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் முகமது ஆமீர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சிரிப்பான கம்பேரிசன்:

அதற்கான காரணம் பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “விராட் கோலி இந்த தலைமுறையின் மகத்தான வீரர். பாபர் அசாம், ஸ்டீவ் ஸ்மித் அல்லது ஜோ ரூட்டை அவருடன் ஒப்பிடும் போது நான் சிரிப்பேன். நாம் யாரையும் விராட் கோலியுடன் ஒப்பிட முடியாது. ஏனெனில் அவர் இந்தியாவுக்காக நிறைய போட்டிகளை வென்று கொடுத்துள்ளார்”

“அது மற்ற வீரர்களுக்கு அசாத்தியம் போல இருக்கும். ஒரு ஃபார்மட் மட்டுமின்றி 3 வகையான கிரிக்கெட்டிலும் விராட் கோலி இந்த தலைமுறையின் மகத்தான பேட்ஸ்மேன். விராட் கோலி தனது வேலை நெறிமுறையில் மற்ற வீரர்களை விட தனித்துவமாக இருக்கிறார். 2014 இங்கிலாந்து தொடரில் தடுமாறிய அவர் அங்கிருந்து கம்பேக் கொடுத்து அடுத்த 10 வருடங்கள் அற்புதமாக விளையாடியது சாதனை கிடையாது”

- Advertisement -

அமீர் பாராட்டு:

“2017 சாம்பியன்ஸ் டிராபி ஃபைனலில் அவருடைய விக்கெட் எங்களுக்கு முக்கியமாக இருந்தது. அதுவே கோப்பையை வெல்லவும் உதவியது. ஒருவேளை விராட் கோலி அவுட்டாகாமல் இருந்திருந்தால் நாங்கள் தோல்வியை சந்தித்திருப்போம். ஏனெனிக் அவர் சேசிங்கில் எந்தளவுக்கு சிறந்தவர் என்பதை நாம் அறிவோம். அதே போல சச்சின் டெண்டுல்கரை அவுட்டாக்கியது எனக்கு மிகவும் ஸ்பெஷல் தருணம்”

இதையும் படிங்க: 5 ஓவர்ஸ்.. முன்ன மாதிரி இல்ல.. கமின்ஸை விட டேஞ்சரான ஸ்டார்க்கை அடிக்க இந்திய அணிக்கு புஜாரா அட்வைஸ்

“என்னுடைய வாழ்வில் 2009 சாம்பியன்ஸ் ட்ராபியில் மட்டுமே அவருக்கு எதிராக பந்து வீசியுள்ளேன். அந்தப் போட்டியில் அவருடைய விக்கெட்டை எடுத்தேன். 3 நாட்கள் சச்சின் பாஜியின் விக்கெட்டை எடுத்ததை என்னால் நம்ப முடியவில்லை” எனக் கூறினார். அந்த வகையில் சிறந்த பேட்ஸ்மேனாக விளையாடி வரும் அவரை கிங் கோலி என்று பலரும் பாராட்டுவது என குறிப்பிடத்தக்கது.

Advertisement