இது அவமானம்.. 15 பேர் சந்தோசத்துக்கு கடவுளுக்கு நன்றி.. கேரியரின் கடினமான பவுலர் பும்ராவை பாராட்டிய கவாஜா

Bumrah
- Advertisement -

ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 3 – 1 என்ற கணக்கில் இந்தியா இழந்தது. அதனால் பத்து வருடங்கள் கழித்து பார்டர் கவாஸ்கர் கோப்பையை வென்று ஆஸ்திரேலியா சாதனை படைத்தது. அத்துடன் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் போட்டிக்கும் தகுதி பெற்று ஆஸ்திரேலியா அசத்தியது.

மறுபுறம் அந்த இரண்டு வாய்ப்பையும் இந்தியா தவற விட்டது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. இருப்பினும் நம்பிக்கை நாயகன் ஜஸ்ப்ரித் பும்ரா 5 போட்டிகளில் 32 விக்கெட்டுகள் எடுத்து தனி ஒருவனாக போராடியது இந்திய ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்தது. முன்னதாக அந்த தொடரில் 9 இன்னிங்ஸில் உஸ்மான் கவாஜாவை 6 முறை பும்ரா அவுட்டாக்கி தெறிக்க விட்டார்.

- Advertisement -

தனி ஒருவன் பும்ரா:

அப்படிப்பட்ட அவரை கடைசி போட்டியின் கடைசி இன்னிங்க்ஸில் எதிர்கொள்ளாததால் மகிழ்ச்சியடைந்ததாக கவாஜா கூறியுள்ளார். அதனாலேயே ஆஸ்திரேலியா வென்றதாக தெரிவிக்கும் அவர் பும்ரா தம்முடைய கேரியரில் எதிர்கொண்ட கடினமான பவுலர் என்றும் பாராட்டியுள்ளார். இது பற்றி கவாஜா பேசியது பின்வருமாறு.

“நான் பும்ராவிடம் போல்டானேன். கடைசியில் அவர் காயத்தை சந்தித்தது அவமானம். ஆனால் அதற்காக நாங்கள் கடவுளுக்கு நன்றி சொல்கிறோம். கடைசி இன்னிங்ஸில் பேட்டிங் செய்வதற்கு சவாலான பிட்ச்சில் அவரை எதிர்கொள்வது நைட்மேராக இருந்திருக்கும். ஆனால் அவர் பவுலிங் செய்வதற்கு வராததை பார்த்ததும் நமக்கு இங்கே வெற்றி வாய்ப்பு உறுதியானதாக நாங்கள் நினைத்தோம்”

- Advertisement -

கடினமான பவுலர்:

“அவர் நான் எதிர்கொண்டதிலேயே மிகவும் கடினமான பவுலர். அப்படிப்பட்ட அவரிடம் மோதிய சாம் கோன்ஸ்டஸ் போன்ற திமிரானவரை நான் இதுவரை பார்த்ததில்லை. அதே சமயம் நல்ல குணத்தை கொண்ட அவர் தனது முகத்தில் சிரிப்பை வைத்துள்ளார்” என்று கூறினார். பும்ராவை பற்றி அதே நிகழ்ச்சியில் இந்தியாவின் தொல்லை நாயகன் டிராவிஸ் ஹெட் பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க: விராட் கோலி மற்றும் ரோஹித் ஆகியோர் இனியும் டெஸ்ட் போட்டிகளில் ஆடனும்னா இதை செய்ஞ்சே ஆகனும் – விவரம் இதோ

“பும்ரா பவுலிங் செய்யாததற்கு எங்கள் அணியில் இருந்த 15 வீரர்களும் மகிழ்ச்சி அடைந்தோம் என்று நினைக்கிறேன். அவர் மிகச்சிறந்த செயல்பாட்டாளர். அவருக்கு இந்தத் தொடர் அற்புதமாக அமைந்தது” என்று கூறினார். அத்துடன் நித்திஷ் ரெட்டி போன்ற இளம் இந்திய வீரர்கள் இந்த தொடரில் சிறப்பாக விளையாடியதாகவும் ஹெட் பாராட்டினார். அடுத்ததாக இலங்கை தொடருக்கு தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement