ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணியானது அங்கு நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரை ஒன்றுக்கு மூன்று (1-3) என்ற கணக்கில் இழந்தது. இந்த ஆஸ்திரேலியா தொடருக்கு முன்னதாக இந்திய அணி நியூசிலாந்து தொடரையும் இழந்திருந்ததால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கும் தகுதி பெறாமல் வெளியேறியது.
விராட் மற்றும் ரோஹித் ஆகியோருக்கு ஏற்பட்டுள்ள நிலை :
இந்நிலையில் இந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரின் போது இந்திய அணியின் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் முன்னணி வீரரான விராட் கோலி ஆகியோரது மோசமான பேட்டிங் ஃபார்ம் காரணமாக அமைந்தது.
விராட் கோலி இந்த தொடரில் 23 ரன்கள் சராசரி உடன் 190 ரன்கள் மட்டுமே அடித்திருந்த வேளையில் ரோகித் சர்மாவும் 5 இன்னிங்ஸ்களில் வெறும் 31 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். இதன் காரணமாக அவர்கள் இருவரது டெஸ்ட் எதிர்காலமும் தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. அதிலும் குறிப்பாக இன்னும் ஆறு மாதத்திற்கு பிறகே இந்திய அணி அடுத்த டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது.
அப்படி நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடைபெறயிருக்கும் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான அணியில் பல மாற்றங்கள் இருக்கும் என்று பேசப்படும் பெரும் வேளையில் அந்த தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்காது என்றே தெரிகிறது. ஏனெனில் ஆஸ்திரேலிய தொடர் முடிந்து பேசியிருந்த கௌதம் கம்பீர் கூறுகையில் : இனி எந்த ஒரு வீரர்களும் முழு உடற்தகுதியுடன் இருக்கும் பட்சத்தில் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்ற கட்டளை விதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அவர் கூறியது போன்றே தற்போது மோசமான பேட்டிங் பார்மால் தடுமாற்றத்தை சந்தித்து வரும் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் இனியும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் எனில் அடுத்த மாதம் இந்தியாவில் நடைபெற இருக்கும் ரஞ்சி தொடரில் அவர்கள் இருவரும் விளையாடியாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க : பார்மில் இல்லனா என்ன? விராட் கோலி ஓய்வு பெறப்போவது எப்போது? – அவரது முடிவு என்ன?
ஏனெனில் விராட் கோலி கடைசியாக 2012-ஆம் ஆண்டும், ரோகித் சர்மா கடைசியாக 2015-ஆம் ஆண்டுமே ரஞ்சி போட்டியில் விளையாடியிருந்தனர். அதன் பிறகு அவர்கள் உள்ளூர் போட்டிகளில் விளையாடவில்லை. இதன் காரணமாக தற்போது மீண்டும் அவர்கள் உள்ளூர் டொமஸ்டிக் கிரிக்கெட்டில் விளையாடி தங்களது பார்மை நிரூபித்தால் மட்டுமே அவர்களால் எதிர்வரும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.



