Ashes 2023 : போராடி சாதித்த கவாஜா, 43 வருடங்களுக்கு பின் தனித்துவமான சாதனை – ரவி சாஸ்திரி, புஜாரா உலக சாதனை சமன்

Usman Khawaja
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் ஆஷஸ் 2023 கிரிக்கெட் தொடரில் பர்மிங்கம் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அதிரடியாக செயல்பட்டு 393/8 ரன்கள் குவித்து முதல் நாளிலேயே டிக்ளர் செய்தது. அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் ஜோ ரூட் சதமடித்து 118 ரன்களும் ஜானி பாய்ஸ் டு 78 ரன்களும் எடுக்க ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா உஸ்மான் கவாஜா நங்கூரமாக விளையாடி சதமடித்து 141 ரன்கள் எடுத்த உதவியுடன் 386 ரன்கள் குவித்த நிலையில் இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஓலி ராபின்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

அதன் பின் 7 ரன்கள் முன்னிலுடன் களமிறங்கிய இங்கிலாந்து ஹரி ப்ரூக், ஜோ ரூட் தலா 46 ரன்கள் எடுத்த உதவியுடன் 273 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலிய சார்பில் அதிகபட்சமாக கேப்டன் கமின்ஸ் மற்றும் நேதன் லயன் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகள் சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 281 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு வார்னர் 36, லபுஸ்ஷேன் 13, ஸ்மித் 6 என முக்கிய வீரர்கள் குறைந்த ரண்களில் பெவிலியன் திரும்பிய போதிலும் மீண்டும் உஸ்மான் கவாஜா சவாலாக நின்று 197 பந்துகளை எதிர்கொண்டு 65 ரன்கள் எடுத்து போராடி அவுட்டானார்.

- Advertisement -

தனித்துவமான சாதனை:
அதை மிடில் ஆர்டர் டிராவிஸ் ஹெட் 16, க்ரீன் 28, கேரி 20 என முக்கிய வீரர்கள் குறைந்த ரன்களில் அவுட்டாகி வீணடிக்க தெரிந்தாலும் கடைசி நேரத்தில் கேப்டன் கமின்ஸ் 44* ரன்களும் நேதன் லயன் 16* ரன்களும் எடுத்ததால் 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா 1 – 0* (5) என ஆரம்பத்திலேயே தொடரில் முன்னிலை பெற்றது. அந்த வகையில் இந்த போட்டியில் 141, 65 என 2 இன்னிங்சிலும் நங்கூரமாக விளையாடிய கவாஜா வெற்றிக்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

முன்னதாக இந்த போட்டியில் முதல் நாளிலேயே தைரியமாக டிக்ளர் செய்ததால் மாலை நேரத்தில் களமிறங்கிய ஆஸ்திரேலியாவின் உஸ்மான் கவாஜா 2வது நாள் முழுவதுமாக பேட்டிங் செய்து 3வது நாளில் அவுட்டானார். அதை தொடர்ந்து 4வது நாளில் இங்கிலாந்து 273 ரன்களுக்கு அவுட்டான பின் மாலை நேரத்தில் 281 ரன்களை துரத்துவதற்காக களமிறங்கிய அவர் 5வது நாளிலும் பேட்டிங் செய்தார். அந்த வகையில் இந்த போட்டியின் 5 நாட்களிலும் பேட்டிங் செய்த அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 43 வருடங்களுக்குப் பின் ஒரு போட்டியில் 5 நாட்களும் பேட்டிங் செய்த 2வது ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனை படைத்தார்.

- Advertisement -

மேலும் ஒட்டுமொத்தமாக ஒரு டெஸ்ட் போட்டியின் 5 நாட்களிலும் பேட்டிங் செய்த வீரர் என்ற ரவி சாஸ்திரி, புஜாரா போன்ற இந்திய வீரர்களின் உலக சாதனையையும் அவர் சமன் செய்தார். கடந்த 1960இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய வீரர் மோட்கனள்ளி ஜெய் சிம்ஹா 5 நாட்களும் பேட்டிங் செய்து அந்த சாதனையை முதல்முறையாக படைத்த நிலையில் ரவி சாஸ்திரி, புஜாரா ஆகிய இந்திய வீரர்களும் அந்த பெருமையை பெற்றுள்ளனர்.

அந்த விரிவான பட்டியல் இதோ:
1. மோட்கனள்ளி ஜெய் சிம்ஹா (இந்தியா) : ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 1980
2. ஜெஃப்ரி பாய்காட் (இங்கிலாந்து) : ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 1977
3. கிம் ஹுக்ஸ் (ஆஸ்திரேலியா) : இங்கிலாந்துக்கு எதிராக, 1980
4. ஆலன் லம்ப் (இங்கிலாந்து) : வெஸ்ட் இண்டீஸ் எதிராக, 1984
5. ரவி சாஸ்திரி (இந்தியா) : இங்கிலாந்துக்கு எதிராக, 1984

இதையும் படிங்க:Ashes 2023 : டி20 மிஞ்சிய த்ரிலலர், டெயில் எண்டருடன் மிரட்டிய கமின்ஸ் – இங்கிலாந்தின் அதிரடியை தூளாக்கி ஆஸி சாதித்தது எப்படி

6. ஆண்ட்ரியன் க்ரிஃபித் (வெஸ்ட் இண்டீஸ்) : நியூசிலாந்துக்கு எதிராக, 1999
7. ஆண்ட்ரூ பிளின்டாப் (இங்கிலாந்து) : இந்தியாவுக்கு எதிராக, 2007
8. அல்வீரோ பீட்டர்சன் (தென்னாபிரிக்கா) : நியூசிலாந்துக்கு எதிராக, 2012
9. செடேஸ்வர் புஜாரா (இந்தியா) : இலங்கைக்கு எதிராக, 2017
10. ரோரி பர்ன்ஸ் (இங்கிலாந்து) : ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 2019
11. கிரைக் பிரத்வெய்ட் (வெஸ்ட் இண்டீஸ்) : ஜிம்பாப்பேவுக்கு எதிராக, 2023
12. தக்நரேன் சந்தர்பால் (வெஸ்ட் இண்டீஸ்) : ஜிம்பாப்வேபுக்கு எதிராக, 2023
13. உஸ்மான் கவாஜா (ஆஸ்திரேலியா) : இங்கிலாந்துக்கு எதிராக, 2023*

Advertisement