
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியானது கடைசியாக சொந்த மண்ணில் இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டு தொடர்களிலும் தோல்வியை தழுவியதால் இம்முறை அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய அணியை வீழ்த்த மும்முறமாக தயாராகி வருகிறது. ஏற்கனவே ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியின் வீரர்கள் அங்கு பயணித்த வேளையில் இந்த இந்திய அணிக்கு எதிரான தொடருக்கான ஆஸ்திரேலிய வீரர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டனர்.
எதிர்வரும் நவம்பர் 22-ஆம் தேதி துவங்கும் இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தற்போது முழுவீச்சில் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் இந்த தொடர் குறித்து தற்போதைய ஆஸ்திரேலியா அணியில் இடம் பிடித்திருக்கும் நட்சத்திர வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர துவக்க வீரரான உஸ்மான் கவாஜா இந்திய அணியை சேர்ந்த நட்சத்திர வீரரான விராட் கோலி குறித்து சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : இப்போது இருக்கும் விராட் கோலி மிகவும் வித்தியாசமானவர். முன்பெல்லாம் விராட் கோலி மிகவும் ஆக்ரோஷமாக இருப்பார்.
ஆனால் இப்போது இருக்கும் விராட் கோலி ஆக்ரோஷமாக இருப்பவர் கிடையாது. எனவே நீங்கள் அவரிடம் சென்று ஜாலியாக ஜோக் அடித்துக் கொண்டே பேசலாம். ஆனாலும் அவர் இப்பொழுதும் நமக்கு எதிராக ரன் அடிக்கக் கூடியவர் என்பதை மறந்து விடக்கூடாது என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்து தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் இந்திய அணி குறித்தும் விராட் கோலி குறித்தும் அலெக்ஸ் கேரி பேசியதாவது : இந்தியாவில் நாங்கள் விளையாடும் போது ஆக்ரோஷமான செயல்கள் எதுவும் நடக்கவில்லை. அவரும் எங்களை எதுவும் சீண்டவில்லை. அவர் அங்கு சிறப்பாக பேட்டிங் செய்திருந்தார். எனவே இங்கும் அவர் சிறப்பாக பேட்டிங் செய்ய முயற்சிப்பார் என்று தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க : ரஞ்சி கோப்பை: 11 ரன்ஸ்.. 7 விக்கெட்ஸ்.. த்ரில்லர் வெற்றிக்கு வித்திட்ட ஷமி.. வெற்றியை சமர்ப்பித்து பதிவு
மிட்சல் ஸ்டார்க் கூறும்பொழுது : நான் அவருடன் இணைந்து ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும் என்பதற்காக அவரைப் பற்றி தெரிந்து கொள்ள முயற்சித்தேன். அவருக்கு சண்டையிடுவதும், சண்டை செய்வதும் மிகவும் பிடிக்கும் என்பதை அவர் அருகில் இருந்து தெரிந்து கொண்டேன் என மிட்சல் ஸ்டார்க் கூறியது குறிப்பிடத்தக்கது.