விளையாடிய மழை.. உடைந்த பாபர் படையின் கனவு.. பாகிஸ்தானை வீட்டுக்கு அனுப்பிய அமெரிக்கா சரித்திர சாதனை

USA vs PAK
- Advertisement -

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடரில் ஜூன் 14ஆம் தேதி இரவு 8 மணிக்கு அமெரிக்காவின் ஃப்ளோரிடா நகரில் 30வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் குரூப் ஏ பிரிவில் இடம் வகிக்கும் அமெரிக்கா மற்றும் அயர்லாந்து அணிகள் மோதின. அந்தப் போட்டிக்காக அமெரிக்கா, அயர்லாந்து ரசிகர்களை விட பாகிஸ்தான் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.

ஏனெனில் முதல் போட்டியிலேயே கத்துக்குட்டியாக கருதப்படும் அமெரிக்காவிடம் சூப்பர் ஓவரில் தோற்ற பாகிஸ்தான் 2வது போட்டியில் இந்தியாவிடம் 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. அதைத் தொடர்ந்து கனடாவுக்கு எதிராக வென்ற பாகிஸ்தான் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமெனில் இந்தப் போட்டியில் அமெரிக்கா தோற்க வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது.

- Advertisement -

வெளியேறிய பாகிஸ்தான்:
அதனால் இப்போட்டியில் அமெரிக்காவின் தோல்விக்காக பாகிஸ்தான் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் கடந்து சில நாட்களாகவே ஃப்ளோரிடா நகரில் கடும் மழை பெய்து வெள்ளம் ஏற்பட்டது. அப்போதே பாகிஸ்தான் ரசிகர்கள் கவலையடைந்த நிலையில் இப்போட்டி தூங்குவதற்கு முன்பாக ஃப்ளோரிடா மைதானத்தில் மழை பெய்தது. அதனால் போட்டி துவங்குவதற்கு தாமதமானது.

இருப்பினும் ஒரு மணி நேரத்திற்கு பின் மழை விட்டதால் போட்டியை துவக்குவதற்காக நடுவர்கள் தயாரானார்கள். ஆனால் மழையால் நிரம்பிய தண்ணீரை மைதானத்திலிருந்து அகற்றுவதற்கே இரவு 11 மணி ஆனது. அப்போது 5 ஓவர்கள் கொண்ட போட்டியை நடத்த நடுவர்கள் திட்டமிட்டனர். ஆனால் 3 மணி நேரம் காத்திருந்த மழை மீண்டும் 11 மணிக்கு திடீரென்று வந்து பெய்தது. அதனால் வேறு வழியின்றி போட்டியை ரத்து செய்த நடுவர்கள் 2 அணிகளுக்கும் தலா 1 புள்ளியை கொடுத்தனர்.

- Advertisement -

இதையும் சேர்த்து 4 போட்டிகளில் 5 புள்ளிகளை பெற்ற அமெரிக்க அணி அயர்லாந்துடன் சேர்த்து பாகிஸ்தானையும் நாக் அவுட் செய்து இந்தியாவுக்கு அடுத்தபடியாக சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது. இதன் வாயிலாக டி20 உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக குரூப் சுற்றைக் கடந்து சூப்பர் சுற்றுக்குள் நுழைந்து அமெரிக்கா புதிய சரித்திரம் படைத்துள்ளது. மறுபுறம் முதலில் அமெரிக்காவிடம் லீக் சுற்றில் சூப்பர் ஓவரில் அவமானத் தோல்வியை பதிவு செய்த பாகிஸ்தான் தற்போது சூப்பர் 8 சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் இந்த உலகக் கோப்பையிலிருந்து பரிதாபமாக வெளியேறியது.

இதையும் படிங்க: இப்படி ஒரு டாமினேட் செய்யும் பிளேயர் இந்தியாவுக்கு கிடைப்பார்ன்னு நினைக்கவே இல்ல.. சாஸ்திரி பாராட்டு

அதனால் 2009க்குப்பின் டி20 உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியின் கனவு சுக்கு நூறாக உடைந்தது. அந்த வகையில் விதியுடன் சேர்ந்து மழையும் விளையாடியதால் கடைசிப் போட்டியில் விளையாடுவதற்கு முன்பாகவே பாகிஸ்தான் பரிதாபமாக வீட்டுக்கு கிளம்புவதற்கு பெட்டி படுக்கையை கட்ட வேண்டிய பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

Advertisement