- Advertisement -
உலக கிரிக்கெட்

பாகிஸ்தானை வீழ்த்த வெறும் 30 நிமிடம் போதும்.. வெற்றிக்கு இதான் காரணம்.. சொன்னதை செய்த அமெரிக்க கேப்டன்

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடரில் ஜூன் 6ஆம் தேதி நடைபெற்ற 11வது லீக் போட்டியில் பாகிஸ்தானை சூப்பர் ஓவரில் அமெரிக்கா தோற்கடித்தது. டாலஸ் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 44, சடாப் கான் 40 ரன்கள் எடுத்த உதவியுடன் 150/7 ரன்கள் எடுத்தது.

அதைத் துரத்திய அமெரிக்காவுக்கு கேப்டன் மோனைக் பட்டேல் 50, ஆண்ட்ரீஸ் கவுஸ் 35, ஆரோன் ஜோன்ஸ் 36*, நிதீஷ் குமார் 14* ரன்கள் எடுத்தனர். அதனால் 20 ஓவரில் அமெரிக்காவும் சரியாக 159/3 ரன்கள் எடுத்ததால் போட்டி சமனில் முடிந்தது. அதைத் தொடர்ந்து வெற்றியாளரை தீர்மானிப்பதற்காக நடத்தப்பட்ட சூப்பர் ஓவரில் அமெரிக்கா 18/1 ரன்கள் எடுத்து அசத்தியது.

- Advertisement -

சாதித்த அமெரிக்கா:
சொல்லப்போனால் அந்த அணிக்கு ஆரோன் ஜோன்ஸ் மட்டும் 10 ரன்கள் எடுத்தார். எஞ்சிய 8 ரன்களை சூப்பர் ஓவரை வீசிய முகமது அமீர் ஒய்ட் போட்டு இலவசமாக வழங்கினார். அதைத்தொடர்ந்து 19 ரன்களை துரத்திய பாகிஸ்தானுக்கு எதிராக 13 ரன்கள் மட்டும் கொடுத்து ஒரு விக்கெட்டை எடுத்த நேத்ராவல்கர் அமெரிக்காவை வெற்றி பெற வைத்தார். அதனால் பாகிஸ்தானுக்கு எதிராக முதல் முறையாக விளையாடிய போட்டியிலேயே வெற்றியை பதிவு செய்து அமெரிக்கா வரலாறு படைத்தது.

முன்னதாக சமீபத்தில் வங்கதேசத்தை 2 – 1 (3) என்ற கணக்கில் தோற்கடித்த அமெரிக்கா இந்த தொடரில் கனடாவை முதல் போட்டியில் வீழ்த்தியது. அதனால் இப்போட்டியில் முதல் 30 – 40 நிமிடங்கள் நன்றாக விளையாடினால் பாகிஸ்தானையும் வீழ்த்துவோம் என்று அமெரிக்க கேப்டன் மோனக் படேல் போட்டி துவங்குவதற்கு முன்பாகவே தெரிவித்தார். கடைசியில் சொன்னது போலவே பவர் பிளேவில் 3 விக்கெட்டுகளை எடுத்து ஆரம்பத்திலேயே பாகிஸ்தானை அடக்கியது அமெரிக்காவின் வெற்றிக்கு முக்கிய காரணமானது.

- Advertisement -

இது பற்றி போட்டியின் முடிவில் அமெரிக்க கேப்டன் பேசியது பின்வருமாறு. “டாஸ் வென்று முதல் 6 ஓவர்களில் நாங்கள் பந்து வீசி விக்கெட்டுகளை எடுத்து அவர்களை அமைதியாக வைத்திருந்த விதம் நன்றாக இருந்தது. அவர்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த பின் ரிஸ்க் எடுத்து விளையாடுவார்கள் என்பது எங்களுக்கு தெரியும். அதே சமயம் 160 ரன்களை எங்களால் சேசிங் செய்ய முடியும் என்பதும் தெரியும்”

இதையும் படிங்க: இந்தியா டூ அமெரிக்கா.. பாகிஸ்தான் அணியை ஒற்றை ஆளாய் வீழ்த்திய இந்த இந்திய வம்சாவளி வீரர் – யார் தெரியுமா?

“அதற்கு ஒரு பார்ட்னர்ஷிப் மட்டுமே தேவை. உலகக் கோப்பையில் விளையாடும் இந்த வாய்ப்பு ஒவ்வொரு வருடமும் உங்களுக்கு கிடைக்காது. எனவே நாங்கள் ஒவ்வொரு பந்திலும் எங்களை ஈடுபடுத்திக் கொண்டு வெற்றிக்காக போராடுகிறோம்” என்று கூறினார். இதன் வாயிலாக டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானை தோற்கடித்த முதல் உறுப்பு நாட்டு அணி என்ற சாதனையும் அமெரிக்க படைத்தது.

- Advertisement -