- Advertisement -
ஐ.பி.எல்

தல தோனியுடன் ஒவ்வொரு நொடியும் மாஸ்டர்க்ளாஸ்.. இந்த பரிசை ஃபிரேம் பண்ணி வைப்பேன்.. உர்வில் நெகிழ்ச்சி

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் அணியாக லீக் சுற்றுடன் வெளியேறியது. இந்த வருடம் ஆரம்பம் முதலே மோசமாக பேட்டிங் செய்த அந்த அணி வரலாற்றிலேயே முதல் முறையாக புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்து மோசமான சாதனை படைத்தது. அதனால் மிகப்பெரிய ஏமாற்றத்தைச் சந்தித்த சிஎஸ்கே ரசிகர்களுக்கு பாதியில் கிடைத்த சில இளம் வீரர்கள் ஆறுதலாக அமைந்தனர்.

குறிப்பாக துவக்க வீரர் ஆயுஷ் மாத்ரே அதிரடியாக விளையாடி சிஎஸ்கே அணிக்காக அதிக ரன்கள் குவித்து அசத்தினார். அதே போல தென்னாப்பிரிக்காவை சேர்ந்த இளம் வீரர் தேவால்ட் ப்ரேவிஸ் மிடில் ஆர்டரில் வெளுத்து வாங்கி 2 வெற்றிகளில் பங்காற்றினார். அவர்களைப் போலவே இளம் வீரர் உர்வில் படேல் 3வது இடத்தில் அடித்து நொறுக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார்.

- Advertisement -

ஒவ்வொரு நொடியும் மாஸ்டர்க்ளாஸ்:

அதனால் 2026 ஐபிஎல் தொடரில் இந்த வீரர்கள் சிஎஸ்கே அணி கம்பேக் கொடுக்க உதவி செய்வார்கள் என்ற நம்பிக்கை அனைவரிடமும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 2025 ஐபிஎல் தொடரில் தல தோனியுடன் விளையாடியதை மறக்க முடியாது என்று உர்வில் படேல் தெரிவித்துள்ளார். இந்தியாவின் மகத்தான ஜாம்பவான் வீரரான தோனியுடன் இருந்த ஒவ்வொரு தருணமும் மாஸ்டர் கிளாஸ் என்று அவர் நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

அத்துடன் தோனி தமக்கு கையொப்பமிட்டு கொடுத்த ஜெர்சியை வீட்டில் ஃபிரேம் செய்து வைக்க உள்ளதாகவும் உர்வில் படேல் தெரிவித்துள்ளார். இது பற்றி இன்ஸ்டாகிராமில் தோனியுடன் தமது குடும்பம் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு அவர் கூறியுள்ளது பின்வருமாறு. “எம்எஸ் தோனி எனும் ஜாம்பவான் தலைமையில் விளையாடுவதற்கான வாய்ப்பைப் பெற்றதற்காக நன்றி உடையவனாக இருக்கிறேன்”

- Advertisement -

உர்வில் நெகிழ்ச்சி:

“களத்திலும் களத்திற்கு வெளியேயும் தல தோனியுடன் இருந்த ஒவ்வொரு தருணமும் பொறுமை, லீடர்ஷிப், மனிதாபிமானம் போன்ற விஷயங்களில் மாஸ்டர் கிளாஸாக இருந்தது. இந்த வருடம் அவரிடம் ஏற்கனவே நான் நிறைய கற்றுக் கொண்டுள்ளேன். அவருடைய தலைமையில் இன்னும் வளர்வதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்”

இதையும் படிங்க: 80/5ன்னு திணறிய மும்பை.. கரெண்ட்டை கட் பண்ணி எப்படி 180 அடிச்சாங்க தெரியல.. அஸ்வின் சந்தேகம்

“உடைமாற்றும் அறையில் தோனியின் அருகில் நின்றது முதல் களத்தில் அவருடன் சேர்ந்து விளையாடியது வரை ஒவ்வொரு நொடியும் கனவு நிஜமானதைப் போல் இருந்தது. அவருடன் என்னுடைய குடும்பம் இருந்த தருணம் இன்னும் ஸ்பெஷலானது. அதை நாங்கள் எப்போதும் மறக்க மாட்டோம். தற்போது “சிறந்த வாழ்த்துக்கள் உர்வில்” என்ற கையொப்பத்துடன் தோனி பாய் ஜெர்சியை கொடுத்துள்ளார். அது எப்போதும் ஃபிரேமாக இருக்கப் போகிறது. இது ஒரு சிறந்த லீடர் மற்றும் மனிதாபிமானம் மிக்கவருடன் உண்மையான உத்வேகத்தை கொடுக்கக்கூடிய பயணமாக அமைந்தது” என்று கூறியுள்ளார்.

- Advertisement -