80/5ன்னு திணறிய மும்பை.. கரெண்ட்டை கட் பண்ணி எப்படி 180 அடிச்சாங்க தெரியல.. அஸ்வின் சந்தேகம்

R Ashwin
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மே 30ஆம் தேதி எலிமினேட்டர் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் குஜராத்தை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை குவாலிஃபயருக்கு 2 போட்டியில் பஞ்சாப்பை எதிர்கொள்ள தகுதி பெற்றது. அந்த வெற்றிக்கு 81 ரன்கள் அடித்த ரோஹித் சர்மா முக்கிய பங்காற்றியதால் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

முன்னதாக ரோகித் சர்மா இந்த வருடம் தொடர்ச்சியாக ரன்களை குவிக்க முடியாமல் தடுமாறி வருகிறார். அப்படிப்பட்ட அவர் குஜராத்துக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியிலும் ஆரம்பத்திலேயே 2 கேட்ச்களை கொடுத்தார். அதை குஜராத் அணியின் விக்கெட் கீப்பர் குசால் மெண்டிஸ் மற்றும் பிரசித் கிருஷ்ணா தவற விட்டார்கள். இறுதியில் தங்களுடைய தோல்விக்கு அதுவே காரணமானதா போட்டியின் முடிவில் குஜராத் கேப்டன் சுப்மன் கில் வருத்தம் தெரிவித்தார்.

- Advertisement -

திடீர்னு பவர்கட்:

இந்நிலையில் 2018 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் கேப்டனாக தாம் செயல்பட்டதாக ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார். அந்தத் தொடரில் மும்பைக்கு எதிரான போட்டியில் தங்களுடைய அணி சிறப்பாக பவுலிங் செய்ததாக அஸ்வின் தெரிவித்துள்ளார். அதனால் 80/5 என சரிந்த மும்பை தோல்வியின் பிடியில் சிக்கிய போது திடீரென மைதானத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக அஸ்வின் தெரிவித்துள்ளார்.

20 நிமிடங்கள் கழித்து மீண்டும் மின்சாரம் வந்த போது கைரன் பொல்லார்ட் அடித்து நொறுக்கி மும்பையை 180 ரன்கள் குவிக்க வைத்து வெற்றி பெற வைத்ததாக அஸ்வின் கூறியுள்ளார். அது எப்படி என்பதை இன்று வரை தம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை என்று அஸ்வின் கூறியுள்ளார். அப்படி மும்பைக்கு மட்டும் எப்படி முக்கிய நேரங்களில் அதிர்ஷ்டம் கிடைக்கிறது? என்பது கண்டறியப்பட வேண்டிய ஒன்று என்றும் அஸ்வின் சந்தேகித்துள்ளார்.

- Advertisement -

அஸ்வின் சந்தேகம்:

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “பிரசித் கிருஷ்ணா, மெண்டிஸ் கேட்ச்களை தவற விட்டதால் கடவுள் கொடுத்த வாய்ப்பை ரோகித் முழுமையாக பயன்படுத்திக் கொண்டார். மும்பை இந்தியன்ஸ் அணியை பொறுத்த வரை நான் ஒவ்வொரு முறையும் ஒரு விஷயத்தை கவனித்து வருகிறேன். 2018 சீசனில் மும்பைக்கு எதிராக நான் பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்தேன். அப்போட்டியில் 13 ஓவரில் 80+ ரன்களை எடுத்த மும்பை 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அதனால் மும்பை வெற்றிக்கு கொஞ்சம் கூட அருகில் இல்லை”

இதையும் படிங்க: ஜஸ்ப்ரித் பும்ராவை ஜாம்பவான்கள் மால்கம் மார்ஷல், வாசிம் அக்ரமுடன் கம்பேர் பண்ணாதீங்க.. அஸ்வின்

“அப்போது திடீரென ராட்சத மின்விளக்குகளின் மின்சாரம் துண்டிக்கப்பட்டு 20 நிமிடங்கள் இடைவெளி உண்டானது. மீண்டும் போட்டி துவங்கிய போது பொல்லார்ட் அடித்து நொறுக்கினார். அதனால் அவர்கள் 180 – 200 ரன்களை எடுத்தார்கள். கண்டிப்பாக அது போன்ற சமயங்களில் நீங்கள் அதிர்ஷ்டத்தை சம்பாதிப்பீர்கள். ஆனால் மும்பைக்கு மட்டும் அது போன்ற சமயங்களில் எப்போதும் அதிர்ஷ்டம் கிடைக்கிறது. அவர்கள் எப்படி இந்தளவுக்கு அதிர்ஷ்டமிக்கவர்களாக இருக்கிறார்கள் என்பதை நாம் கண்டறிய வேண்டும்” என்று யூடியூப் சேனலில் கூறினார்.

Advertisement