- Advertisement -
ஐ.பி.எல்

இது உங்களுக்காக தான்.. 13 பந்துகளில் அரைசதம் அடித்த பின்னர் – பேப்பரை எடுத்து நீட்டிய உர்வில் படேல்

லக்கோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 53-ஆவது லீக் போட்டியில் விளையாடி வரும் சி.எஸ்.கே அணியானது 204 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை துரத்தி தற்போது அதிரடியாக விளையாடி வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் பிளேஆப் வாய்ப்பை தக்க வைக்க முடியும் என்பதனால் இந்த ஆட்டத்தின் முடிவை காண ரசிகர்களும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

அரைசதத்தை வித்தியாசமாக கொண்டாடிய உர்வில் படேல் :

அந்த வகையில் இன்றைய போட்டி துவங்கியதும் டாசில் வெற்றி பெற்ற சி.எஸ்.கே அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடி லக்னோ அணி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 203 ரன்கள் குவித்தது. பின்னர் 24 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது சென்னை அணியானது விளையாடி வருகிறது.

- Advertisement -

இவ்வேளையில் இந்த போட்டியின் போது மூன்றாவது வீரராக களம்புகுந்த இளம்வீரர் உர்வில் பட்டேல் 13 பந்துகளிலேயே 7 சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி என அரைசதம் அடித்து அசத்தினார். அதோடு இந்த போட்டியில் ஒட்டுமொத்தமாக 23 பந்துகளை சந்தித்த அவர் 2 பவுண்டரி மற்றும் 8 சிக்ஸர்கள் என 65 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இந்நிலையில் இன்றைய போட்டியில் அவர் அரைசதம் கடந்த போது பாக்கெட்டில் இருந்து ஒரு பேப்பரை எடுத்து நீட்டியது ரசிகர்கள் மத்தியில் கவனத்தில் ஈர்த்திருந்தது. பொதுவாகவே ஐ.பி.எல் போட்டிகளில் இதுபோன்று சில சுவாரஸ்யமான செலிப்ரேஷன்கள் நடந்துள்ள வேளையில் இன்றைய போட்டியில் அவர் எடுத்த பேப்பரில் குறிப்பிடப்பட்டதாவது :

- Advertisement -

இதையும் படிங்க : யாஷஸ்வி ஜெய்ஸ்வாலின் வரலாற்று சாதனையை சமன் செய்த உர்வில் படேல் – விவரம் இதோ

“இது உங்களுக்காக தான் அப்பா” என்று எழுதப்பட்டிருந்தது. இதன் காரணமாக இந்த போட்டியில் அவர் அடித்த அரைசதத்தை அவரது தந்தைக்கு உணர்ச்சி பூர்வமாக உர்வில் பட்டேல் சமர்ப்பித்துள்ளார். அதோடு இந்த ஆட்டத்தில் அவர் அடித்த அரைசதத்தின் மூலம் யாஷஸ்வி ஜெய்ஸ்வாலின் அதிவேக ஐ.பி.எல் அரைசதம் சாதனையையும் அவர் சமன் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -