சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த இலங்கை வீரர் – விவரம் இதோ

Tharanga

சர்வதேச கிரிக்கெட் அணிகளில் சிறந்த அணியாக ஒரு காலத்தில் திகழ்ந்த இலங்கை அணி தற்போதைய சூழலில் பல நட்சத்திர வீரர்களை இழந்து தள்ளாடி வருகிறது என்றே கூறலாம். ஒரு நேரத்தில் ஜெயசூர்யா, ஜெயவர்த்தனே, சங்கக்காரா, அட்டபட்டு என ஜாம்பவான்களின் வரிசையில் இருந்த இலங்கை அணி தற்போது சாதாரண ஒரு அணியாக மாறி வருகிறது. மேலும் சமீப காலமாகவே பல தோல்விகளை சந்தித்து வருகிறது.

SL

இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் அணிக்காக 15 ஆண்டுகளாக விளையாடி வந்த முன்னணி வீரரான உபுல் தரங்கா திடீரென ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு வரை இலங்கை அணிக்கு கேப்டனாகவும் அவர்செயல்பட்டுள்ளார். 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அகமதாபாத்தில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்தின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டிற்கு அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து உபுல் தரங்கா கடைசியாக 2017ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடி இருந்தார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய அவர் தற்போது அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

tharanga 2

இலங்கை கிரிக்கெட் அணிக்காக 31 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1754 ரன்களையும் எடுத்துள்ளார். இதில் 3 சதங்கள் மற்றும் 8 அரை சதங்கள் அடித்துள்ளார். அதிகபட்சமாக 165 ரன்கள் குவித்துள்ளார்.

- Advertisement -

tharanga 1

மேலும் 235 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 6951 ரன்கள் குவித்துள்ளா.ர் இதில் 15 சதங்களும் 37 அரை சதங்களும் அடங்கும். அதிரடி தொடக்க வீரரான இவர் பல ஆண்டுகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். இந்நிலையில் அவரும் ஓய்வு பெற்றுள்ளது இலங்கை ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.