சமீபத்தில் ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய கிரிக்கெட் அணியானது அங்கு நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடியிருந்தது. அதற்கடுத்து தற்போது நாடு திரும்பும் இந்திய அணியானது அடுத்ததாக தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் இரண்டு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட தயாராகி வருகிறது.
இந்தியா தெ.ஆ டெஸ்ட் தொடரை எந்த சேனலில் பார்க்கலாம்? :
அதன்படி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தென்னாப்பிரிக்க அணியானது இந்திய அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடயிருக்கிறது. இந்த சுற்றுப்பயணத்திற்கான முதல் தொடராக இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது வரும் நவம்பர் 14-ஆம் தேதி முதல் துவங்க இருக்கிறது.
இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடரானது எங்கு நடைபெறுகிறது? எந்த நேரத்தில் போட்டிகள் துவங்கும்? எந்த சேனலில் இந்த தொடரை பார்க்கலாம்? என்பது குறித்த ஒளிபரப்பு தகவலை இந்த பதிவில் காணலாம். அந்த வகையில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதலாவது போட்டி நவம்பர் 14-ஆம் தேதி கொல்கத்தா மைதானத்தில் துவங்குகிறது. இந்த போட்டியானது இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு டாஸ் போடப்பட்டு 9:30 மணிக்கு துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று இரண்டாவது டெஸ்ட் போட்டியானது நவம்பர் 22-ஆம் தேதி கௌஹாத்தி மைதானத்தில் துவங்கும் என்றும் அந்தப் போட்டி காலை 8:30 மணிக்கு டாஸ் போடப்பட்டு 9 மணிக்கு துவங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இவ்விரு டெஸ்ட் போட்டிகளையும் ஒளிபரப்பும் உரிமத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழும நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அதனால் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழும தொலைக்காட்சிகளில் இந்த தொடரை நேரடியாக கண்டு களிக்கலாம்.
அதுமட்டும் இன்றி இணையத்தின் வாயிலாக இந்த டெஸ்ட் தொடரை பார்க்க விரும்புவோர் ஜியோ ஹாட் ஸ்டார் செயலி மூலம் நேரடியாக கண்டு களிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே இங்கிலாந்து டெஸ்ட் தொடரினை இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமன் செய்த சுப்மன் கில் தலைமையிலான இந்திய டெஸ்ட் அணியானது அடுத்ததாக சொந்த மண்ணில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
இதையும் படிங்க : ரவீந்திர ஜடேஜா மட்டும் போதாது.. சஞ்சு சாம்சன் வேணும்னா அவரையும் சேர்த்து தாங்க – ராஜஸ்தான் ராயல்ஸ் கெடுபிடி
அதன் காரணமாக எதிர்வரும் இந்த தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இந்திய அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடரானது தற்போதே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.



