ரவீந்திர ஜடேஜா மட்டும் போதாது.. சஞ்சு சாம்சன் வேணும்னா அவரையும் சேர்த்து தாங்க – ராஜஸ்தான் ராயல்ஸ் கெடுபிடி

Sanju Samson CSK
- Advertisement -

இந்தியாவில் அடுத்த ஆண்டு 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது கோடை காலத்தில் நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கு முன்னதாக வீரர்களின் மினி ஏலமானது டிசம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் நடைபெறவுள்ள வேளையில் அதற்குள் அடுத்த ஐபிஎல் தொடரில் பங்கேற்க இருக்கும் அனைத்து அணிகளும் தங்களது அணியில் இருந்து வெளியேற்ற விரும்பும் வீரர்களின் பட்டியலையும், தக்க வைக்க விரும்பும் வீரர்களின் பட்டியலையும் நவம்பர் 15-ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என ஐ.பி.எல் நிர்வாகம் ஏற்கனவே கெடு விதித்திருந்தது.

ஜடேஜாவுடன் சேர்த்து அவரையும் தாங்க : ராஜஸ்தான் ராயல்ஸ் கெடுபிடி

இதன் காரணமாக இன்னும் சில தினங்களில் அடுத்த ஐபிஎல் தொடரில் பங்கேற்க இருக்கும் 10 அணிகளும் தங்களது அணியில் தக்க வைக்க விரும்பும் வீரர்களின் பட்டியலையும், வெளியேற்ற விரும்பும் வீரர்களின் பட்டியலையும் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

அதோடு இந்த மினி ஏலத்திற்கு முன்னதாக வீரர்களின் டிரேடிங் முறையும் நடைமுறையில் உள்ளதால் அதிலும் சில வீரர்களின் அணி மாற்றம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள டிரேடிங்கில் சஞ்சு சாம்சனின் டிரேடிங் தான் பெரியளவில் அனைவரது மத்தியிலும் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது.

ஏனெனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகத்துடன் ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாக அந்த அணியில் இருந்து வெளியேறவுள்ள சஞ்சு சாம்சனை மினி ஏலத்திற்கு முன்னதாகவே பல்வேறு அணிகள் டிரேடிங் செய்ய விருப்பம் காண்பித்து வருகின்றன. அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது தோனிக்கு அடுத்து விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக சஞ்சு சாம்சனை பார்ப்பதனால் அவரை டிரேடிங் செய்ய விருப்பம் தெரிவித்திருந்தது.

- Advertisement -

ஏற்கனவே இதற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் முறையான வர்த்தகத்திலும் ஈடுபட்டதாக கூறப்பட்டது. அப்படி சஞ்சு சாம்சன் சென்னை அணிக்கு வரும் பட்சத்தில் ரவீந்திர ஜடேஜா ராஜஸ்தான் அணிக்கு செல்வார் என்று பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் சஞ்சு சாம்சனை சி.எஸ்.கே அணிக்கு அனுப்ப ராஜஸ்தான் ராயல்ஸ் ஒரு முக்கிய கெடு விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : 2026 ஐ.பி.எல் தொடருக்கு முன்னதாக ஆர்.சி.பி அணியின் கேப்டனுக்கு நேர்ந்த சோகம் – விவரம் இதோ

அந்தவகையில் சஞ்சு சாம்சன் வேண்டுமெனில் ரவீந்திர ஜடேஜாவுடன் சேர்த்து கூடுதலாக டேவால்டு பிரேவிஸ்யையும் அனுப்பினால் நாங்கள் சஞ்சு சாம்சனை அனுப்புகிறோம் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நிர்வாகம் சிஎஸ்கே அணியிடம் கூறிவிட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் இந்த இரண்டு வீரர்களையும் அனுப்பிவிட்டு சிஎஸ்கே நிர்வாகம் சஞ்சு சாம்சனை வாங்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Advertisement