தொடர் புறக்கணிப்பால் 28 வயதிலேயே ஓய்வை அறிவித்து அதிர்ச்சியளித்த இந்திய U19 கேப்டன் – விவரம் இதோ

Unmukt-2
- Advertisement -

டெல்லியை சேர்ந்த 28 வயது இளம் வீரரான உன்முக்த் சந்த் கடந்த 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோர் உலக கோப்பையில் கேப்டனாக இருந்த அவர் இந்திய அணிக்கு வெற்றியை பெற்றுத் தந்தவர். அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற இறுதிப் போட்டியில் 111 ரன்கள் விளாசி இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்து அவருக்கு விராத் கோலியை போல் இந்திய அணியில் விரைவில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

unmukt

- Advertisement -

ஆனால் இறுதிவரை இந்திய அணியில் அவருக்கான வாய்ப்பு என்பது கிடைக்கவே இல்லை. மேலும் 2011 முதல் 16 வரை ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான், மும்பை, டெல்லி ஆகிய அணிகளுக்காக விளையாடி அவர் 2017ஆம் ஆண்டில் ஐபிஎல் தொடர்களில் இருந்தும் வெளியேற்றப்பட்டு தொடர்ச்சியான ஏமாற்றத்தை சந்தித்தார்.

இந்நிலையில் தற்போது இந்திய உள்ளூர் அணிகளுக்கும் விளையாட முடியாததால் தற்போது அவர் 28 வயதிலேயே இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். முதல்தர கிரிக்கெட்டில் 3379 ரன்கள் குவித்துள்ளார். இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் :

Unmukt

கடந்த சில வருடங்களாக எனக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருகின்றன. எனவே பிசிசிஐ-க்கு விடை கொடுத்து உலகம் முழுவதிலும் உள்ள வாய்ப்புகளை தேடிச் செல்கிறேன் என உருக்கமான கருத்தினை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே எடுத்த முடிவில் அவர் இந்திய அணியில் இருந்து ஓய்வு பெற்று அமெரிக்கா சென்று அங்குள்ள உள்ளூர் போட்டிகளில் விளையாட இருப்பதாக தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

unmukt 1

இந்தியாவில் இதே போன்ற சில வீரர்களும் மற்ற நாடுகளை சேர்ந்த சில வீரர்களும் தற்போது அமெரிக்காவில் குடியேறி அங்கு கிரிக்கெட் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement