கிரிக்கெட் உலகின் லிட்டில் மாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் புதல்வன் அர்ஜுன் டெண்டுல்கர், இந்திய யு19 அணிகளில் தேர்வானார். ஆனால் அவரது துரதிர்ஷ்டம் இதுநாள் வரை யு19 அணியின் பயிற்ச்சியாளராக இருந்த நட்சத்திர வீரர் ராகுல் ட்ராவிட் யு19 அணியின் பயிற்ச்சியாளர் பதிவியிலிருந்து தர்காலிகமாக வெளியேறியுள்ளார்.
கடந்த சில நாட்களாக யு19 அணிக்காண வீரர்களை தேர்வு செய்வதற்காக, பல்வேறு 19 வயதிற்கு உட்பட்ட இளம் வீரர்களுக்கு பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சிகள் நடைபெற்று வந்தது. இந்த பயிற்சியில் சச்சினின் மகனும் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் நேற்று அறிவிக்கப்பட்ட இலங்கை செல்லும் யு19 அணியில் அர்ஜுனுனின் பெயரும் அறிவிக்கப்பட்டது.
கடந்த சில ஆண்டுகளாக யு19 அணியின் பயிற்ச்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் இருந்து வருகிறார். ஆனால் தற்போது ராகுல் டிராவிட் இம்மாதம் இங்கிலாந்து செல்லும் இந்திய ‘ஏ’ அணியின் பயிற்சியாளராக செல்ல இருப்பதால், யு19 அணியின் பயிற்ச்சியாளராக அவர் பங்குபெற போவதில்லை. இதனால் அர்ஜுன் டெண்டுல்கர், பங்கேற்கப்போகும் தனது முதல் யு19 போட்டியில் ராகுல் ட்ராவிடின் மேற்பார்வையில் விளையாடும் வாய்ப்பு பறிபோனது.
இந்நிலையில் ட்ராவிடிற்கு பதிலாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வூர்கேறி வெங்கட் ராமன், இந்திய யு19 அணியின் பயிற்ச்சியாளர் பொறுப்பை ஏற்றுள்ளார். தமிழ் நாட்டை சேர்ந்த வெங்கட் ராமன், இதுவரை இந்திய அணிக்காக 27 ஒருநாள் போட்டிகளிலும், 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.