- Advertisement -
ஐ.பி.எல்

இது லிஸ்ட்லயே இல்லையே.. வியந்து பாராட்டிய சென்னை.. எச்சரித்த பஞ்சாப்.. சிஎஸ்கே ரசிகர்கள் கவலை

ஐபிஎல் 2024 தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி தங்களுடைய 3வது வெற்றியை பதிவு செய்து பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. குறிப்பாக ஏப்ரல் 26ஆம் தேதி ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த பஞ்சாப் ஒட்டுமொத்த ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தது என்றே சொல்லலாம்.

ஏனெனில் அப்போட்டியில் முதலில் விளையாடிய பஞ்சாப் சுனில் நரேன் 71, பில் சால்ட் 75 ரன்கள் எடுத்த உதவியுடன் 262 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதை சேசிங் செய்த பஞ்சாப் அணிக்கு பிரப்சிம்ரன் சிங் 54, ஜானி பேர்ஸ்டோ 108*, ரிலீ ரோசவ் 26, சசாங் சிங் 68* ரன்கள் அடித்து 18.4 ஓவரிலேயே வெற்றி பெற வைத்தனர்.

- Advertisement -

லிஸ்ட்லயே இல்லயே:
அதனால் ஐபிஎல் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில் அதிகபட்ச இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்த அணி என்ற தென்னாப்பிரிக்காவின் சாதனையை உடைத்த பஞ்சாப் புதிய உலக சாதனை படைத்தது. அத்துடன் 22 சிக்ஸர்களை பறக்க விட்ட பஞ்சாப் ஐபிஎல் வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த அணி என்ற சரித்திரத்தையும் படைத்தது.

இந்நிலையில் இப்போட்டியில் மொத்தம் 523 ரன்கள் மற்றும் 42 சிக்சர்கள் அடிக்கப்பட்டது. அதைப் பார்த்த சிஎஸ்கே அணி தங்களுடைய டிவிட்டர் பக்கத்தில் “523 ரன்கள். 42 சிக்ஸர்கள். இது உலகிற்கு வெளியே நடந்த அற்புதமான போட்டி” என்று பஞ்சாப் அணியை பாராட்டியுள்ளது. குறிப்பாக முதல்வன் எனும் பிரபல தமிழ் திரைப்படத்தில் “இது நம்ம லிஸ்ட்லேயே இல்லையே” என்று நடிகர் மணிவண்ணனின் சொல்லும் புகைப்படத்தை பதிவிட்டு பஞ்சாப் அணியை சிஎஸ்கே பாராட்டியிருந்தது.

- Advertisement -

அதைப் பார்த்த பஞ்சாப் அணி “விரைவில் சந்திப்போம்” என்ற தலைப்புடன் பதிவிட்டு சிஎஸ்கே அணிக்கு பதிலளித்துள்ளது. குறிப்பாக அதே முதல்வன் படத்தில் மக்கள் அனைவரும் நீங்கள் முதல்வராக வரவேண்டும் என்று கேட்டுக்கொண்ட பின் கையை உயர்த்தும் நடிகர் அர்ஜுனின் புகைப்படத்தை பதிவிட்டு பஞ்சாப் பதிலளித்துள்ளது. விரைவில் மே 1 மற்றும் மே 5 ஆகிய 2 தேதிகளில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோத உள்ளன.

இதையும் படிங்க: வெல்டன் நண்பா.. அங்கயே உங்க உழைப்பை பாத்துருக்கேன்.. பஞ்சாப் நாயகன் சசாங் சிங்கிற்கு ஸ்டைன் பாராட்டு

அந்த 2 போட்டிகளில உங்களையும் வீழ்த்தி வெற்றி பெறுவதற்காக விரைவில் சந்திக்க வருகிறோம் என்று சிஎஸ்கே அணிக்கு பஞ்சாப் அணி மறைமுகமான எச்சரிக்கையை கொடுத்துள்ளது. சொல்லப்போனால் இதற்கு முன் திணறலாக செயல்பட்ட பஞ்சாப் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் திண்டாடி வந்தது. அதனால் அந்த 2 போட்டிகளிலும் பஞ்சாப்பை எளிதாக வீழ்த்தி சிஎஸ்கே வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது பஞ்சாப் இருக்கும் ஃபார்முக்கு அந்த 2 போட்டிகளில் வெற்றி பெற முடியுமா? என்ற கவலை சிஎஸ்கே ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -