இன்று துவங்கும் உலகக்கோப்பை போட்டிகள். எந்த சேனலில் பார்க்கலாம் – முழு விவரம் இதோ

u-19
Advertisement

சர்வதேச கிரிக்கெட்டின் வருங்கால இளம் ஹீரோக்களை கண்டறியும் ஐசிசி அண்டர் – 19 உலக கோப்பை 2022 தொடர் வரலாற்றிலேயே முதல் முறையாக இந்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடைபெறுகிறது. வரலாற்றில் 14-வது முறையாக நடைபெறும் இந்த உலக கோப்பையில் நடப்புச் சாம்பியன் வங்கதேசம், முன்னாள் சாம்பியன் இந்தியா உள்ளிட்ட உலகின் 16 முன்னணி அணிகள் பங்கேற்கின்றன. லீக் சுற்று, நாக் அவுட் சுற்று உட்பட மொத்தம் 48 போட்டிகளை அடங்கிய இந்த உலகக் கோப்பையானது வெஸ்ட் இண்டீஸ் நாட்டிலுள்ள ஆண்டிகுவா, டிரினிடாட் போன்ற 4 முக்கிய நகரங்களில் நடைபெற உள்ளது.

u 19

கோலாகல துவக்கம்:
ரசிகர்களிடையே மிகவும் எதிர்பார்ப்பை எகிற செய்துள்ள இந்த உலகக் கோப்பை நேற்று வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் உள்ள கயானா நகரில் கோலாகலமாக தொடங்கியது. நேற்றைய முதல் போட்டியில் இந்த உலகக் கோப்பையை நடத்தும் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

- Advertisement -

அதில் அபாரமாக செயல்பட்ட ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி வெற்றி பெற்றது. அதேபோல் நேற்று நடந்த 2வது போட்டியில் ஸ்காட்லாந்தை 40 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

u 19 1

வெற்றியுடன் துவங்குமா இந்தியா:
இதை அடுத்து இந்த உலக கோப்பையில் லீக் சுற்றில் இன்று 4 போட்டிகள் நடைபெற உள்ளன. அதில் குரூப் பி பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி தனது முதல் போட்டியில் தென்ஆப்பிரிக்காவை எதிர்கொள்ள உள்ளது.

- Advertisement -

இதற்கு முன் 4 முறை சாம்பியன் பட்டம் வென்று இந்த உலக கோப்பையின் வெற்றிகரமான அணியாக விளங்கும் இந்தியா இந்த முறை கேப்டன் “யாஷ் துள்” தலைமையில் களமிறங்கவுள்ளது. அவர் தலைமையிலான இளம் இந்திய அணி தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான இந்த முதல் போட்டியிலேயே வெற்றி பெற்று இந்த உலகக் கோப்பையை வெற்றியுடன் துவக்குமா என இந்திய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

ind u 19

ஆசிய சாம்பியன்:
முன்னதாக கடந்த சில வாரங்களுக்கு முன் துபாயில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பையில் அபாரமாக செயல்பட்ட யாஷ் துள் தலைமையிலான இந்திய அணி இறுதிப் போட்டியில் இலங்கையை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது.

- Advertisement -

எனவே அதேபோன்றதொரு செயல்பாட்டை இந்த உலக கோப்பையிலும் இந்திய வீரர்கள் வெளிப்படுத்துவார்கள் என நம்பலாம். அத்துடன் கடைசியாக நடந்த 3 ஐசிசி அண்டர் – 19 உலக கோப்பையில் இந்திய அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்று ஒரு வலுவான வரலாறு கொண்ட அணியாகவே வலம் வருகிறது.

u 19 ind 1

ஆசிய கோப்பை 2021 அடிப்படையில் இந்த போட்டியில் பங்கேற்கும் உத்தேச இந்திய அணி இதோ: ஆங்க்ரிஸ் ரகுவன்ஷி, ஹரனூர் சிங், எஸ்கே ரஷீத், நிஷாந்த் சிந்து, யாஷ் துள் (கேப்டன்), ராஜன்கட், பாவா, ஆராத்யா யாதவ் (கீப்பர்), கௌஷல் தாம்பே, ராஜேவர்தன் ஹங்காரகேகர், ரவி குமார், அநீஸ்வர் கவுதம்.

இதையும் படிங்க : இப்போவாச்சும் புஜாரா – ரஹானேவை நீக்குவீர்களா? பத்திரிகையாளர் சந்திப்பில் விராட் கோலி – என்ன சொன்னாரு?

எதில் பார்க்கலாம்:
இந்த போட்டியானது வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் உள்ள கயானா நகரில் இருக்கும் “ப்ரோவின்ஸ்” மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று மாலை 6.30 மணிக்கு துவங்க உள்ளது. இப்போட்டியினை இந்தியாவில் இருக்கும் ரசிகர்கள் ஸ்டார்ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி மற்றும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் ஆப் வாயிலாக நேரடியாக கண்டு களிக்கலாம்.

Advertisement