இப்போவாச்சும் புஜாரா – ரஹானேவை நீக்குவீர்களா? பத்திரிகையாளர் சந்திப்பில் விராட் கோலி – என்ன சொன்னாரு?

Kohli
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா விளையாடி வந்த 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்கா 2 – 1 என்ற கணக்கில் வென்று அசத்தியுள்ளது, இளம் வீரர்களை வைத்துக்கொண்டு அனுபவம் வாய்ந்த விராட் கோலி தலைமையிலான இந்தியாவை தோற்கடித்த தென் ஆப்பிரிக்கா பலரின் பாராட்டுகளை பெற்றுள்ளது. இந்த தொடரில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சமி போன்றவர்களால் பந்துவீச்சு தரமானதாக இருந்த போதிலும் இந்தியா தோல்வி அடைவதற்கு மோசமான பேட்டிங் ஒரு மிக முக்கிய காரணமாக அமைந்தது இந்திய ரசிகர்களை வேதனை அடைய செய்துள்ளது.

pujara 1

- Advertisement -

பாரமான புஜாரா – ரகானே :
இன்னும் சொல்லப்போனால் தென்னாப்பிரிக்காவில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பை இந்தியா கோட்டை விட்டதற்கு பேட்டிங் துறையில் அனுபவ வீரர்களாக இடம் வகித்த செடேஸ்வர் புஜாரா மற்றும் அஜிங்கிய ரஹானே ஆகியோர் தான் காரணம் என அடித்துக் கூறலாம். ஏனெனில் கடந்த 2 வருடங்களாக பார்ம் இல்லாமல் தவித்து வந்த இவர்களுக்கு இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆற்றிய பங்கிற்காகவும் அனுபவத்தையும் மதித்து மீண்டும் இந்த தொடரில் முழு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

ஆனால் அந்த நம்பிக்கையை பயன்படுத்த தவறிய அவர்கள் “இந்திய அணியில் தங்களின் இடத்தை காப்பாற்றி கொள்ளும் அளவிற்கு பேட்டிங் செய்தார்களே அன்றி இந்தியா வெற்றி பெறும் அளவுக்கு ரன்கள் அடிக்க வில்லை”.

Pujara

மோசமான பார்ம்:
இந்த முக்கியமான தொடரில் அவர்களுக்கு அளிக்கப்பட்ட 6 இன்னிங்ஸ்களில் 5 இன்னிங்ஸ்களில் மிகவும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்கள். ஜொகனஸ்பர்க் நகரில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் மட்டும் இருவரும் அரைசதம் அடித்து 111 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த போதிலும் அது இந்தியாவின் வெற்றிக்கு பலனளிக்கவில்லை.

- Advertisement -

மொத்தத்தில் இந்த 3 போட்டிகளில் புஜாரா 124 ரன்களும், ரகானே 136 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்கள். சச்சின், டிராவிட் போன்ற எத்தனையோ வீரர்கள் அனுபவம் வளர வளர ரன்களை மலைபோல குவித்தனர் ஆனால் இவர்களோ இவ்வளவு அனுபவத்தைப் பெற்ற போதிலும் ரன்கள் எடுக்க திணறுவது இந்திய ரசிகர்களை கோபமடைய செய்துள்ளது.

pujara 1

நீக்கப்படுவார்களா:
இதனால் கடுப்பாகியுள்ள இந்திய ரசிகர்கள் இந்திய டெஸ்ட் அணியில் இருந்து இந்த இருவரையும் நீக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் போர்க்கொடி தூக்கி உள்ளார்கள். இந்நிலையில் இந்த தோல்வியால் இந்திய அணியில் இருந்து புஜாரா – ரகானே நீக்கப்படுவார்களா என நேற்றைய போட்டி முடிந்த பின் கேப்டன் விராட் கோலியிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர் அளித்த பதில் இதோ:

- Advertisement -

“இது பற்றி இங்கே நான் அமர்ந்து வருங்காலத்தில் என்ன நடக்க போகிறது என்பது பற்றி விவாதிப்பதற்கு எதுவும் இல்லை. இது பற்றி இந்திய தேர்வு குழுவினரிடம் அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று நீங்க தான் கேட்கவேண்டும். இது எனது வேலை அல்ல” “புஜாரா – ரகானே ஆகியோரிடம் உள்ள அனுபவத்திற்காக அவர்கள் இதற்கு முன் இந்திய கிரிக்கெட்டுக்கு ஆற்றிய பங்கிற்காக நான் இதற்கு முன்பு கூறியதுபோல மீண்டும் அவர்களுக்கு ஆதரவு அளிக்க உள்ளேன்.

pujara 1

ஜொஹனஸ்பர்க் போட்டியில் கூட அவர்கள் முக்கியமான இன்னிங்ஸ்கள் ஆடினார்கள். இருப்பினும் தேர்வு குழுவினர் எந்த முடிவு எடுத்தாலும் அது பற்றி நான் பேசப்போவதில்லை” என கூறிய விராட் கோலி இப்போதும்கூட புஜாரா மற்றும் ரகானேவிற்கு இந்திய அணியில் விளையாட தனது ஆதரவு உள்ளதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க : விராட் கோலிக்கு அபராதம் அல்லது தடை போட வேண்டும்! இனிமே இப்படி பண்ணக்கூடாது – வாகன் சாடல்

மேலும் அவர்களை இந்திய அணியில் இருந்து நீக்குவது பற்றி தேர்வு குழுவினர் தான் முடிவு எடுக்க வேண்டும் என தெரிவித்த அவர் “தேர்வு குழுவினர் என்ன முடிவு எடுத்தாலும் அதை ஏற்றுக்
கொள்ள இருப்பதாகவும்” தெரிவித்துள்ளார்.

Advertisement