விராட் கோலிக்கு அபராதம் அல்லது தடை போட வேண்டும்! இனிமே இப்படி பண்ணக்கூடாது – வாகன் சாடல்

Vaughan
Advertisement

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா பங்கேற்று வந்த 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 – 1 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா கைப்பற்றி அசத்தியுள்ளது. முன்னதாக இந்த தொடரின் முதல் போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி 1 – 0 என தொடரில் முன்னிலை வகித்தது. ஆனாலும் அடுத்த 2 போட்டிகளில் தோல்விகளில் இருந்து மீண்டெழுந்த தென்னாப்பிரிக்கா இளம் வீரர்களை வைத்துக்கொண்டு அனுபவம் வாய்ந்த உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியான இந்தியாவை தோற்கடித்து கோப்பையை வென்று சாதித்துள்ளது.

INDvsRSA

தகர்ந்த கனவு:
இந்த தோல்வியால் தென்னாப்பிரிக்க மண்ணில் முதல் முறையாக ஒரு டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் என்ற இந்தியாவின் வாழ்நாள் சாதனை கனவு மீண்டும் தகர்ந்து போனது. தரமான வீரர்கள் இந்திய அணியில் இருந்த போதிலும் அனுபவமே இல்லாத தென்னாப்பிரிக்காவிடம் கடைசி 2 போட்டிகளில் இந்தியா சரணடைந்த விதம் இந்திய ரசிகர்களை கடும் கவலைக்கு உள்ளாக்கியுள்ளது.

- Advertisement -

டிஆர்எஸ் சர்ச்சை:
முன்னதாக இப்போட்டியில் நேற்று நடந்த 3வது நாளில் 212 என்ற இலக்கை தென்னாப்பிரிக்கா துரத்தியபோது 2வது போட்டியில் 92* ரன்கள் விளாசி வெற்றிபெற செய்த அந்த அணியின் கேப்டன் டீன் எல்கர் மீண்டும் நிதானத்துடன் பேட்டிங் செய்தார். அப்போது அபாரமாக பந்துவீசிய அஷ்வின் அவரை எல்பிடபிள்யூ முறையில் அவுட் செய்தார். அதை எல்கர் ரெவியூ செய்ய அந்த பந்து ஸ்டம்புக்கு மேலே சென்றதால் “நாட் – அவுட்” கொடுக்கப்பட்டது இந்திய வீரர்களை கடும் கோபமடையச் செய்தது.

Ashwin

தடை போடுங்க:
குறிப்பாக இந்திய கேப்டன் விராட் கோலி வேண்டுமென்றே ஸ்டம்ப் அருகே சென்று அதிலுள்ள மைக்கில் “உங்கள் அணி பவுலர்கள் பந்தை தேய்க்கும் போது அதையும் கவனியுங்கள், அதை விட்டுவிட்டு எப்போதும் எதிரணியை நோட்டமிடாதீர்கள்” என கோபமாக திட்டினார். இது கிரிக்கெட் வட்டாரத்தில் மிகப் பெரிய பரபரப்பை உண்டாக்கியது.

- Advertisement -

மேலும் விராட் கோலியின் இந்த செயல்பாட்டிற்கு பல முன்னாள் வீரர்கள் தங்களது கண்டத்தை சமூக வலைத்தளங்களில் தெரிவித்தார்கள். அந்த வரிசையில் விராட் கோலியின் இந்த செயலுக்காக அவரை தடை செய்ய வேண்டும் என இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் மைக்கேல் விமர்சித்துள்ளார்.

stump

தவறான செயல்:
இந்த சர்ச்சை பற்றி அவர் இன்று அளித்துள்ள பேட்டியில், “என்னை பொருத்தவரை இந்தியர்களிடடையே இதை ஒரு அவமரியாதையான செயலாக கருதுகிறேன். அம்பயரிங் முடிவுகள் உங்களுக்கு சாதகமாகவும் வரலாம், எதிராகவும் வரலாம். விராட் கோலி கிரிக்கெட்டின் ஒரு லெஜெண்ட், அப்படிப்பட்ட அவர் இவ்வாறு நடந்து கொண்டிருக்கக் கூடாது” என கூறிய மைக்கேல் வாகன் விராட் கோலி போன்ற நவீன கிரிக்கெட்டின் ஒரு ஜாம்பவான் இது போன்ற செயலில் ஈடுபட்டது மிகவும் தவறான செயல் என தனது அதிருப்தியை தெரிவித்தார்.

இதையும் படிங்க : போதும் சாமி. புஜாரா, ரகானேவின் கதையை முடித்துவிட்டு இந்த 2 பேரை எடுங்க – சுனில் கவாஸ்கர் காட்டம்

தடை அல்லது அபராதம்:
“இதில் ஐசிசி தலையிட்டு இந்திய அணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்டம்ப் மைக்கில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் இந்திய கேப்டன் பேசியதில் இருந்து தப்பிக்க முடியாது. என்னை கேட்டால் அவருக்கு அபராதம் அல்லது தடை விதிக்க வேண்டும்” என இது பற்றி மேலும் தெரிவித்த மைக்கேல் வாகன் இது போன்ற சர்ச்சைகள் கிரிக்கெட்டில் மீண்டும் நிகழாமல் இருப்பதற்காக இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கு அபராதம் அல்லது தடை விதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கு ஆதாரமாக மைக்கில் பதிவு செய்யப்பட்ட வார்த்தைகளை ஐசிசி கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

Advertisement