ஐ.பி.எல் தொடர் நடக்காவிட்டால் அண்டர் 19 வீரர்களுக்கு வரவிருக்கும் சோதனை – இப்படி ஒரு பிரச்சனையா ?

csk-1
- Advertisement -

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மார்ச் 29ஆம் தேதி துவங்க வேண்டிய ஐபிஎல் தொடர் தற்போது ஏப்ரல் 15ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மேலும் கரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்வதால் இந்த தொடர் நடக்குமா என்பது கேள்விக்குறி தான். இவ்வாறு நடைபெறாவிட்டால் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு சுமார் 3,000 கோடி நஷ்டம் ஏற்படும்.

Ipl cup

இந்த 3000 கோடி நஷ்டத்தை ஈடுகட்ட இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பல்வேறு விஷயங்களை செய்ய வேண்டி உள்ளது. இதன் காரணமாகத்தான் ஐபிஎல் தொடரை எப்படியாவது நடத்தி விட வேண்டும் என பிசிசிஐ தீவிரமாக உள்ளது.

- Advertisement -

மேலும், ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்களுக்கு சம்பளமும் கிடையாது என்று கூறியுள்ளார் வீரர்கள் சங்க தலைவர் மல்ஹோத்ரா. இதுகுறித்து அவர் கூறியதாவது : ஐபிஎல் கிரிக்கெட் விதிகள் தெளிவாக உள்ளது. ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்னர் 15 சதவீத சம்பள பணம் கொடுக்கப்படும், போட்டி காலத்தில் 65% மீதமுள்ள 20% போட்டி முடிந்ததும் கொடுக்கப்படும். இதை வைத்துதான் பிசிசிஐ விதிகள் தெளிவாக எழுதப் பட்டுள்ளது.

போட்டிகள் நடைபெறாவிட்டால் வீரர்களுக்குச் சம்பளம் கிடைக்காது. மேலும், ஐபிஎல் போட்டிகள் நடை பெறாமல் போனால் பிசிசிஐக்கு பெரும் நஷ்டம் ஏற்படும். இவ்வாறு ஏற்படும் பட்சத்தில் உள்ளூர் வீரர்களுக்கும் சம்பளம் கிடைக்காத நிலை ஏற்படலாம். இதன் காரணமாகத்தான் ஐபிஎல் தொடரை நடத்த பிசிசியஐ தீவிரமாக உள்ளது என்று கூறியுள்ளார் மல்ஹோத்ரா.

- Advertisement -

இப்படி இந்த தொடர் நடைபெறாமல் போனால் பாதிக்கப்படபோவது அண்டர் 19 வீரர்கள் தான். ஏனெனில் தற்போது முதன்முறையாக ஏலத்தில் பங்கேற்று சில கோடி வரை பெற்றுள்ள பல இளம்வீரர்கள் இந்த ஐ.பி.எல் நடைபெறவில்லை என்றால் சம்பளம் பெறமாட்டார்கள். மேலும் இந்திய அணியில் இடம்பிடிக்கும் வாய்ப்பும் கனவாகிவிடும் மேலும் இன்னும் ஒரு ஆண்டு அவர்கள் காத்திருக்கவேண்டும். எனவே அதிகம் பாதிக்கப்படுவது அண்டர் 19 வீரர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ind u 19

கரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் வேகம் பிடிக்க ஆரம்பித்துள்ளது. உலகம் முழுவதும் தற்போது வரை 37 ஆயிரம் பேர் இறந்துள்ளனர் இந்தியாவில் 1500க்கும் மேற்பட்ட மக்கள் பாதித்துள்ளன. தொடர்ந்து இந்தியாவின் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது எனவே திட்டமிட்டபடி ஏப்ரல் 15ஆம் தேதி ஐபிஎல் தொடர் நடக்குமா என்பது கேள்விக்குறிதான்.

Advertisement