ஆர்ச்சர் வேணாம்.. இவங்களே போதும்.. 2 ஆவது டெஸ்ட் போட்டிக்கான அணியை அறிவித்த இங்கிலாந்து – லிஸ்ட் இதோ

ENG
- Advertisement -

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது தற்போது தங்களது சொந்த மண்ணில் நடைபெற்று வரும் இந்திய அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட மிகப்பெரிய டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணியானது இந்திய அணியை வீழ்த்தி அசத்தியது.

2 ஆவது போட்டிக்கான பிளேயிங் லெவனை அறிவித்த இங்கிலாந்து :

அதன்படி லீட்ஸ் நகரில் நடைபெற்று முடிந்த முதலாவது போட்டியில் இந்திய அணி நிர்ணயித்த 371 ரன்கள் என்கிற இலக்கினை வெறும் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து எட்டிய இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்தியது. அதனை தொடர்ந்து இந்திய அணிக்கு எதிராக ஜூலை 2-ஆம் தேதி எட்ஜ்பேஸ்டன் நகரில் நடைபெற இருக்கும் இரண்டாவது போட்டியில் பங்கேற்று விளையாட இருக்கிறது.

- Advertisement -

ஏற்கனவே இந்த தொடரின் முதல் போட்டியை வென்ற இங்கிலாந்து அணி ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்கிற கணக்கில் முன்னிலையில் இருக்கும் வேளையில் இரண்டாவது போட்டியில் மிகுந்த நம்பிக்கையுடன் களமிறங்க காத்திருக்கிறது. அதோடு இந்த போட்டியிலும் இந்திய அணியை வீழ்த்தி இரண்டாவது வெற்றியை பதிவு செய்வோம் என்றும் இங்கிலாந்து வீரர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆரம்பிப்பதற்கு இரு நாட்கள் முன்னதாகவே தற்போது அந்த அணி இரண்டாவது போட்டிக்கான பிளேயிங் லெவனை அறிவித்துள்ளது. அந்த வகையில் இங்கிலாந்து அணிக்கு 4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரும்பி வந்துள்ள ஜோப்ரா ஆர்ச்சர் இந்த இரண்டாவது போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரை இந்த போட்டிக்கான பிளேயிங் லெவனில் இங்கிலாந்து அணி சேர்க்கவில்லை.

- Advertisement -

மாறாக முதல் போட்டியில் வென்ற அதே அணியுடன் களமிறங்க இருப்பதாக தெரிவித்துள்ளது. ஏனெனில் முதல் போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணி அந்த வெற்றி முமென்ட்டத்தை அப்படியே தொடர வேண்டும் என்பதற்காக அணியில் எந்த ஒரு மாற்றத்தையும் செய்யாமல் முதல் போட்டியில் விளையாடிய அதே அணி இரண்டாவது போட்டியிலும் விளையாடும் என்று அறிவித்துள்ளது.

இதையும் படிங்க : சுந்தருடன் சேர்த்து இந்தியாவுக்கு 3 ஸ்பின்னர்ஸ்.. நிதிஷ் ரெட்டியும் இருக்காரு.. 2 மாற்றம் பற்றி கோச் ரியான் பேட்டி

அந்த வகையில் இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் இதோ : 1) ஜேக் கிராவ்ளி, 2) பென் டக்கெட், 3) ஆலி போப், 4) ஜோ ரூட், 5) ஹாரி புரூக், 6) பென் ஸ்டோக்ஸ், 7) ஜேமி ஸ்மித், 8) கிரிஸ் வோக்ஸ், 9) பிரைடன் கார்ஸ், 10) ஜாஷ் டங், 11) சோயப் பஷீர்.

Advertisement