சுந்தருடன் சேர்த்து இந்தியாவுக்கு 3 ஸ்பின்னர்ஸ்.. நிதிஷ் ரெட்டியும் இருக்காரு.. 2 மாற்றம் பற்றி கோச் ரியான் பேட்டி

Ryan Doeschate
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்ற இந்திய அணி ஆரம்பத்திலேயே பின்னடைவை சந்தித்தது. இதைத் தொடர்ந்து ஜூலை இரண்டாம் தேதி துவங்கும் 2வது போட்டியில் விளையாடும் இந்திய அணியில் அதிரடியான மாற்றங்கள் நிகழ்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக சுழல் பந்து வீச்சு துறையில் ரவீந்திர ஜடேஜா முதல் போட்டியில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அதே போல சர்துள் தாக்கூர் பேட்டிங், பௌலிங் ஆகிய 2 துறைகளிலும் இந்தியாவுக்கு உதவவில்லை. எனவே அவருக்கு பதிலாக குல்தீப் யாதவ் விளையாட வேண்டும் என்பது பல முன்னாள் வீரர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

- Advertisement -

2 ஸ்பின்னர்கள் உறுதி:

இந்நிலையில் பேட்டிங் துறையில் அசத்தக்கூடிய தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரும் இந்தியாவுக்காக விளையாடும் போட்டியில் இருப்பதாக துணைப் பயிற்சியாளர் ரியான் டஸ்சேட் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “2வது போட்டியில் 2 ஸ்பின்னர்கள் விளையாடுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. அதில் எந்த 2 பேர் விளையாடப் போகிறார்கள் என்பது மட்டுமே கேள்வியாகும்”

“எங்களுடைய 3 ஸ்பின்னர்களும் நன்றாக பவுலிங் செய்கிறார்கள். சுந்தர் நன்றாக பேட்டிங் செய்கிறார். எனவே சூழ்நிலைக்குத் தகுந்தார் போல் ஸ்பின் ஆல் ரவுண்டர் வேண்டுமா அல்லது ஸ்பின்னர் மட்டும் போதுமா என்பதைப் பார்த்து நாங்கள் முடிவெடுப்போம். எப்படி இருந்தாலும் ஒரு பவுலிங் ஆல் ரவுண்டர் விளையாடுவார்” என்று கூறினார். மேலும் ஆஸ்திரேலிய தொடரில் அசத்திய நிதிஷ் ரெட்டி விளையாடுவதற்கும் வாய்ப்புள்ளதாக ரியான் கூறியுள்ளார்.

- Advertisement -

நிதிஷ் வாய்ப்பு:

இது பற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “நித்திஷ் வாய்ப்பை நெருங்கியுள்ளார். ஆஸ்திரேலியாவில் சிறப்பாக விளையாடிய காரணத்தால் அவர் இங்கேயும் வந்துள்ளார். கடந்தப் போட்டியில் அணியின் சமநிலையைக் கருத்தில் கொண்டு நாங்கள் பவுலிங் ஆல் ரவுண்டரை தேர்ந்தெடுத்தோம். அதனாலேயே சர்துள் அவரை முந்திக்கொண்டு வாய்ப்பைப் பெற்றார்”

இதையும் படிங்க: 40 வயதில் 2 சதம்.. டு பிளேஸிஸ் 2 புதிய உலக சாதனை.. 2012 முதல் சிஎஸ்கே அணியின் சேவகனாக அசத்தல்

“தற்போது புதிர்களை நாங்கள் மறுசீரமைக்க முடிவெடுத்து வருகிறோம். தற்சமயத்தில் நித்திஷ் ரெட்டி எங்களுடைய முதன்மை பேட்டிங் ஆல் ரவுண்டராக இருக்கிறார். எனவே அவர் இரண்டாவது போட்டியில் விளையாடுவதற்கு நல்ல வாய்ப்பிருக்கிறது என்று நான் சொல்வேன்” எனக் கூறினார். இதிலிருந்து அடுத்தப் போட்டியில் சாய் சுதர்சன் அல்லது கருண் நாயர், தாக்கூர் ஆகியோர் நீக்கப்பட்டு குல்தீப், நிதிஷ் அணிக்குள் வருவார்கள் என்பது தெரிய வருகிறது.

Advertisement