தனது ஐ.பி.எல் சம்பளத்தின் 10% தொகையை நன்கொடையாக அளித்துள்ள ராஜஸ்தான் அணியின் முன்னணி வீரர் – ரசிகர்கள் வரவேற்பு

RR

சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு இந்தியாவில் கொரோனா எண்ணிக்கை மிக அதிகமாகிக் கொண்டே போகிறது. இரண்டாவது அலை எடுத்து இருக்கும் கொரோனா இந்தியாவில் நாளுக்கு நாள் அதனுடைய தாக்கத்தை அதிகப்படுத்திக் கொண்டே போகிறது. இந்தியாவில் சராசரியாக ஒரு நாளைக்கு 4 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நாளுக்கு நாள் இப்படி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே போகும் அதேவேளையில் மருத்துவமனைகளில் போதுமான படுக்கை வசதிகளும் ஆக்சிஜன் சிலிண்டர்களும் பற்றாக்குறை ஆகியுள்ளது.

Corona-1

ஏழை மக்கள் சிகிச்சைக்கு தகுந்த பணம் இன்றி தவித்து வருகின்றனர். இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் சில கிரிக்கெட் வீரர்கள் தானாகவே முன்வந்து நிதி உதவி அளித்து வந்த வண்ணம் இருக்கின்றனர். முதலில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் 37 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்தார். அவரைத் தொடர்ந்து முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ நாற்பத்தி ஒரு லட்சம் இந்திய மக்களுக்காக நிதி உதவி அளித்த்தார்.

அதேபோல இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறையை தவிர்க்கும் வண்ணம் தனது பங்காக ஒரு கோடி ரூபாய் நிதி உதவி அளித்தார்
ஐபிஎல் அணிகளை பொறுத்தவரையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மொத்தமாக 7 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்துள்ளது. மறுபக்கம் டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்துள்ளது.

Cummins

இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடி வரும் உனத்கட் நேற்று தனது ஐபிஎல் சம்பளத்திலிருந்து 10 சதவிகிதத்தை மக்களுக்கு நிதி உதவி அளிப்பதாக வாக்குறுதி அளித்துள்ளார். அவரது ஐபிஎல் சம்பளம் ஒப்பந்த அடிப்படையில் 8 கோடியே 40 லட்சம் ரூபாய் ஆகும். அதில் பத்து சதவிகிதம் என்பது 84 லட்சம் ரூபாய்.

- Advertisement -

unadkat

இந்திய மக்களுக்காக அவர் 84 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்துள்ளது பலரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது. அதே சமயம் மேற்கிந்திய தீவுகள் அணி வீரரான நிக்கோலஸ் பூரன் தனது ஐபிஎல் சம்பளத்திலிருந்து 10 சதவிகிதத்தை மக்களுக்காக நிதி உதவி அளித்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு பல்வேறு கிரிக்கெட் வீரர்களும், கிரிக்கெட் அணிகளும் நிதி உதவி அளித்து வருவது மக்களுக்கு சிறிது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.