அவரை மாதிரி ஸ்பெஷல் டேலண்ட் நம்ம வரலாற்றிலேயே இல்ல, சரியாக பயன்படுத்தாம வேஸ்ட் பண்ணிடாதீங்க – அஜய் ஜடேஜா கோரிக்கை

Ajay
Advertisement

2023 புத்தாண்டில் இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வரும் இந்தியா முதல் போட்டியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. மும்பையில் நடைபெற்ற அந்த போட்டியில் 4 ஓவர்களில் 27 ரன்களை மட்டும் கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுகளை எடுத்த ஜம்மு காஷ்மீரை சேர்ந்த எக்ஸ்பிரஸ் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் வெற்றியில் முக்கிய பங்காற்றினார். அதை விட 45 ரன்களை எடுத்து அச்சுறுத்தலை கொடுத்துக் கொண்டிருந்த இலங்கை கேப்டன் சனாக்காவை 155 கி.மீ வேகப் பந்தில் சாய்த்த அவர் சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமான பந்தை வீசிய இந்திய பவுலர் என்ற ஜஸ்பிரித் பும்ராவின் (153.33) சாதனையை தகர்த்து புதிய வரலாறு படைத்தார்.

கடந்த சில வருடங்களாகவே ஐபிஎல் தொடரில் மிரட்டலான வேகத்தில் பந்து வீசி அனைவரது கவனத்தை ஈர்த்த அவர் ஏற்கனவே ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமான பந்தை வீசிய இந்திய பவுலர் (157.00) என்ற சாதனையும் படைத்துள்ளார். அதனாலேயே இந்திய அணியில் டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் ஆரம்பத்தில் வேகத்தை மட்டும் நம்பி நல்ல லைன், லென்த் போன்ற விவேகத்தை பின்பற்றாமல் ரன்களை வாரி வழங்கினார். அதனால் 2 போட்டியுடன் கழற்றி விடப்பட்ட அவர் மனம் தளராமல் மீண்டும் உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு தற்போது இந்திய அணியிலும் குறைவான ரன்களைக் கொடுத்து துல்லியமாகவும் வேகமாகவும் பந்து வீசத் துவங்கியுள்ளார்.

- Advertisement -

ஸ்பெஷல் டேலண்ட்:
அதனால் நம்பிக்கையுடன் தொடர்ச்சியான ஆதரவும் கொடுத்தால் நிச்சயம் அசத்துவேன் என்று நிரூபிக்கும் உம்ரான் மாலிக் இந்தியாவில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு கிடைத்த மிகவும் திறமை வாய்ந்த கிரிக்கெட் வீரர் என்று முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா பாராட்டியுள்ளார். எனவே அவருடைய வேகத்துக்கு தகுந்தார் போல் பீல்டிங் செட்டிங் செய்வது, ஓரிரு போட்டிகளில் தடுமாறினாலும் அதற்காக நீக்காமல் எப்படி முன்னேற வேண்டும் என்று சொல்லிக் கொடுப்பது போன்ற அம்சங்களை பின்பற்றி இந்திய அணி நிர்வாகம் தான் அவரது திறமையை வீணடிக்காமல் பயன்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

umran

“ஸ்பெஷலானவர் அவர் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டவர். நீங்கள் அவரை வித்தியாசமாக பயன்படுத்துவதற்கு தொடர்ந்து கவனிக்க வேண்டும். அவருக்காக பீல்டிங் வித்தியாசமாக இருக்க வேண்டும். சிறப்பாக செயல்படுவதற்கு அவர் சற்று நேரம் எடுத்துக் கொள்வார். ஏனெனில் அவரது வேகத்தில் பெரும்பாலான நமது பவுலர்கள் வீசுவதில்லை என்பதால் பந்து எங்கே செல்வது என்று பார்க்க வேண்டும். அவரது சிறந்த திறமையை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று நினைக்க வேண்டும்”

- Advertisement -

“ஆனால் என்னால் சாதிக்க முடியும் என்பதை இப்போட்டியின் கடைசி ஓவரில் அவர் நிரூபித்தார். ஏனெனில் அந்த ஓவரில் சிக்ஸர் கொடுத்த பின்பும் அவர் மனம் தளராமல் விக்கெட் எடுத்தார். எனவே நாட்கள் செல்ல செல்ல அவர் நிறைய கற்றுக் கொள்வார். எனவே அவரை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று அணி நிர்வாகமும் கற்றுக்கொள்ள வேண்டும். நமது அணியில் அவரது வேகத்தில் வீசுபவர்கள் நிறைய பேர் இல்லை. அவரிடம் நல்ல ஆக்சன் மற்றும் பார்ம் உள்ளது. அவரிடம் கட்டுப்படுத்தும் வகையில் பந்து வீசச் சொன்னால் நிச்சயம் அவரது திறமையை நீங்கள் இழந்து விடுவீர்கள்”

ajay

“மேலும் அவர் விக்கெட் எடுக்கும் பவுலராக வருவதற்கு நிறைய காலங்கள் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இந்தியாவில் இருக்கும் இதர பவுலர்களிடம் இல்லாத ஒரு ஸ்பெஷல் திறமை அவரிடம் உள்ளது. இந்தியாவில் நிறைய பவுலர்கள் சீம் பயன்படுத்தி வேகம் மற்றும் பவுன்ஸ் வெளிக்கொண்டு வருவதை பார்க்க முடியும். ஆனால் இவரை போல் காற்றில் வேகத்தை கொண்டு வரும் பவுலர் அரிதாக தான் உங்களுக்கு கிடைப்பார். எனவே இந்தியா அவரை வித்தியாசமாக பயன்படுத்திக் கொள்ளும் என்று நான் நம்புகிறேன்”

இதையும் படிங்கவீடியோ : ஃபுட் ஒர்க் பிரமாதமா இருக்கு, உ.கோ அணியில் செலக்ட் பண்ணுங்க – ஜெய் ஷா பேட்டிங்கை கலாய்க்கும் ரசிகர்கள்

“அத்துடன் அவருடைய புள்ளி விவரங்களை பார்க்காமல் போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தும் விதத்தை பாருங்கள். அவரிடம் உள்ள வேகத்துக்கு விவேகமும் சேர்ந்தால் அவர் அரிதான பவுலராக உருவெடுப்பார். குறிப்பாக பழைய பந்தில் அவர் இன்னும் சிறப்பாக செயல்படுவார். எனவே இப்போதே நன்றாக தோற்றமளிக்கும் அவர் வரும் காலங்களில் இன்னும் சிறப்பாக உருவெடுப்பார்” என்று கூறினார்.

Advertisement