வீடியோ : ஃபுட் ஒர்க் பிரமாதமா இருக்கு, உ.கோ அணியில் செலக்ட் பண்ணுங்க – ஜெய் ஷா பேட்டிங்கை கலாய்க்கும் ரசிகர்கள்

- Advertisement -

உலக அளவில் தற்சமயத்தில் நம்பர் ஒன் கிரிக்கெட் வாரியமாக இருக்கும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் எனப்படும் பிசிசிஐ தலைவராக முன்னாள் வீரர் ரோஜர் பின்னி இருந்தாலும் ஜெய் ஷா அவர்கள் தான் முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரம் மிகுந்த செயலாளர் பதவியில் இருக்கிறார். இந்திய அரசின் அமைச்சரான அமித் ஷா அவர்களின் மகனான இவர் குஜராத் மாநில கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தில் ஒரு முக்கிய பொறுப்பில் செயல்பட்டு வந்த நிலையில் கடந்த 2019இல் சௌரவ் கங்குலி தலைவராக பொறுப்பேற்ற போது செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போதிலிருந்து கடந்த 3 வருடங்களாக செயலாளராக செயல்பட்டு வரும் அவர் சமீபத்தில் சௌரவ் கங்குலி வெளியேறிய பின்பும் 2வது முறையாக அதே பதவியில் நீடிக்கிறார்.

அத்துடன் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராகவும் செயல்பட்டு வரும் அவர் எல்லை பிரச்சனை காரணமாக பாகிஸ்தானில் நடைபெறும் 2023 ஆசிய கோப்பையில் இந்தியா பங்கேற்காது என்றும் அதை பொதுவான இடத்தில் நடத்துவதற்கான அழுத்தம் கொடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். அதனால் கடுப்பாகியுள்ள பாகிஸ்தான் வாரியம் எங்கள் நாட்டுக்கு வரவில்லை என்றால் அதே 2023இல் உங்கள் நாட்டில் நடைபெறும் ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பையில் பங்கேற்க நாங்களும் வரமாட்டோம் என்று பதிலடி கொடுத்துள்ளது.

- Advertisement -

கலக்கல் பேட்டிங்:
இருப்பினும் அதற்கெல்லாம் அசராத அவர் எடுத்த முடிவில் பின்வாங்குவதில்லை என்பது போல் 2023 ஆசிய கோப்பை எங்கு நடைபெறும் என்று அறிவிக்காமலே அதற்கான முதற்கட்ட அட்டவணையை வெளியிட்டுள்ளார். அந்த வகையில் இந்தியா மற்றும் ஆசிய அளவில் கிரிக்கெட் முன்னேற்றத்துக்கான செயல்களை செய்து வரும் அவர் தன்னுடைய சொந்த மாநிலமான குஜராத் மாநிலத்தின் காந்தி நகரில் இருக்கும் கேல்வாணி மண்டல் எனும் இடத்தில் இருக்கும் கலோல் தாலுகாவில் இளம் வீரர்களுக்கான நவீன வசதிகளுடன் கூடிய மைதானத்தை நேற்று திறந்து வைத்தார்.

அப்போது முதல் பந்தை எதிர்கொண்டு மைதானத்தை துவங்கி வைத்த அவர் பேட்டிங் செய்த வீடியோ சமூக விடுதலைகளில் வைரலாகி வருகிறது. குறிப்பாக பவுலர் தவறாக வீசியும் அதற்கேற்றார் போல் தன்னை உட்படுத்திக் கொண்டு வலப்புறம் நகர்ந்து சென்று பேக் ஃபுட்டில் அவர் கொடுத்த பன்ஞ்சை பார்த்து பின்னால் இருந்தவர்கள் மகிழ்ச்சியுடன் கைதட்டி பாராட்டினார்கள். இருப்பினும் அதைப் பார்த்த பெரும்பாலான ரசிகர்கள் உங்களுடைய ஃபுட் ஒர்க் கேப்டன் ரோகித் சர்மாவை விட மிகச் சிறப்பாக உள்ளது என்று கலாய்க்கிறார்கள்.

- Advertisement -

அதனால் சமீப காலங்களில் திண்டாடி வரும் இந்திய அணியில் நீங்களும் ஒருவராக இடம் பிடித்து 2023 உலக கோப்பையில் விளையாடி 2013க்குப்பின் முதல் கோப்பையை வென்று கொடுக்கும் திறமையும் பெற்றுள்ளீர்கள் என்றும் ரசிகர்கள் கலகலக்கிறார்கள். முன்னதாக கடந்த வருடம் பிசிசிஐ தலைவர் லெவன் மற்றும் செயலாளர் லெவன் ஆகிய அணிகள் மோதிய சிறப்பு போட்டியில் இடது கை பந்து வீச்சாளராக அசத்திய ஜெய் ஷா 7 ஓவர்களில் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் விக்கெட் உட்பட 3 விக்கெட்டுகளை எடுத்தார்.

அதோடு நிற்காமல் பேட்டிங்கிலும் 40 ரன்கள் எடுத்த அவர் கங்குலி தலைமையிலான பிசிசிஐ தலைவர் அணியை தோற்கடிக்க முக்கிய காரணமாக அமைந்தார். அந்த வகையில் மிகச் சிறந்த ஆல் ரவுண்டராக அசத்தும் திறமை பெற்றுள்ள அவர் இந்தியாவுக்காக உலக கோப்பையில் விளையாடும் தகுதி உடையவர் என்பதில் சந்தேகமில்லை என ரசிகர்கள் தெரிவிக்கிறார்கள். முன்னதாக செயலாளராக அவர் பொறுப்பேற்ற பின் சர்வதேச அரங்கில் இந்தியா பெரிய அளவில் எந்த வெற்றிகளையும் பதிவு செய்யவில்லை.

இதையும் படிங்கஅதிரடியாக இரட்டை சதமடித்த கேதார் ஜாதவ் 3 வருடம் கழித்து மாஸ் கம்பேக் – ஸ்கோரை பார்த்து ரசிகர்கள் வியப்பு

மேலும் அணி தேர்விலும் சமமற்ற செயல்கள் நடைபெறுவதால் அவருக்கு ஆதரவாக குறைவான ரசிகர்களும் எதிராக நிறைய ரசிகர்களும் சமீப காலங்களில் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் தெரிவிப்பதை பார்க்க முடிகிறது. அந்த வகையிலேயே அவருடைய இந்த பேட்டிங் வீடியோவும் ரசிகர்களின் கிண்டல்களுக்கு உள்ளாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement