அதிரடியாக இரட்டை சதமடித்த கேதார் ஜாதவ் 3 வருடம் கழித்து மாஸ் கம்பேக் – ஸ்கோரை பார்த்து ரசிகர்கள் வியப்பு

- Advertisement -

இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க உள்ளூர் தொடரான ரஞ்சி கோப்பையின் 2022 – 23 சீசன் லீக் சுற்று போட்டிகள் உச்ச கட்டத்தை எட்டியுள்ளன. அதில் ஜனவரி 3ஆம் தேதியன்று எலைட் குரூப் பி பிரிவில் இடம் பிடித்துள்ள அசாம் மற்றும் மகாராஷ்டிரா அணிகள் மோதிய லீக் போட்டி அம்பியில் இருக்கும் டிஒய் பாட்டில் அகாடமி கிரிக்கெட் மைதானத்தில் துவங்கியது. அதில் டாஸ் வென்ற மகாராஷ்டிரா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய அசாம் ஆரம்ப முதலே சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை எடுத்து 274 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டானது. ரியன் பராக் 22 உள்ளிட்ட முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டான அந்த அணிக்கு அதிகபட்சமாக ஸ்சொரூபம் புர்கயஸ்தா மற்றும் ஆகாஷ் செங்குப்தா ஆகியோர் தலா 65 ரன்கள் குவித்தனர்.

மகாராஷ்ட்ரம் சார்பில் அதிகபட்சமாக அசாய் பால்கர் மற்றும் பிரதீப் தாதே தலா 3 விக்கட்டுகள் எடுத்தனர். அதை தொடர்ந்து களமிறங்கிய மகாராஷ்டிரா அணிக்கு பவன் ஷா 18, நாசட் ஷைக் 47 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் குறைவான ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றத்தை கொடுத்தனர். அந்த நிலையில் களமிறங்கிய மகாராஷ்டிராவின் மூத்த வீரர் கேதார ஜாதவ் எதிர்ப்புறம் நின்ற மற்றொரு தொடக்க வீரர் சித்தேஷ் வீருடன் இணைந்து நங்கூரத்தை போட்டு ரன்களை குவித்தார்.

- Advertisement -

தலைவன் இஸ் பேக்:
95/2 என்ற நிலைமையில் ஜோடி சேர்ந்த இவர்கள் அசாம் பவுலர்களுக்கு அவ்வளவு சீக்கிரம் வளைந்து கொடுக்காமல் சீரான வேகத்தில் ரன்களை குவித்தனர். அதில் ஒருபுறம் சித்தேஷ் வீர் மிகவும் மெதுவாக பேட்டிங் செய்த நிலையில் மறுபுறம் ஒரு கட்டத்திற்கு பின் அதிரடியாக ரன்களை குவித்த கேதர் ஜாதவ் மிகவும் விரைவாக சதமடித்து அசத்தினார். அத்தோடு ஓய்ந்து விடுவார் என்று தப்பு கணக்கு போட்ட எதிரணியை நேரம் செல்ல செல்ல வெளுத்து வாங்கிய அவர் இரட்டை சதமடித்தும் ஓயாமல் முச்சதத்தை நோக்கி விளையாடிக் கொண்டிருந்தார்.

இருப்பினும் அவருடன் 3வது விக்கெட்டுக்கு 269 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய சித்தேஷ் வீர் சதமடித்து 106 (308) ரன்களில் அவுட்டானார். அவருக்குப் பின் வந்த அஜிம் காசி 13, சௌரப் நாவ்லே 25, அசய் பால்கர் 39, கேப்டன் அன்கிட் பாவ்னே 34 என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை எடுக்காமல் ஆட்டமிருந்தனர். ஆனாலும் மறுபுறம் நங்கூரமாக நின்று முச்சதத்தை நெருங்கிய கேதர் ஜாதவ் கடைசி நேரத்தில் அதிரடியை அதிகப்படுத்தியதால் துரதிரஷ்டவசமாக கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

இருப்பினும் 21 பவுண்டரிகள் 12 சிக்சருடன் 283 (283) ரன்களை 100.00 என்ற அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்த அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒருநாள் இன்னிங்ஸ் விளையாடி மிரட்டினார். அவர் ஆட்டமிழந்த பின் 594/9 ரன்களில் தனது முதல் இன்னிங்ஸை மகாராஷ்ட்ரா டிக்ளர் செய்ததும் பேட்டிங்கை துவங்கிய அசாம் 3வது நாள் முடிவில் 65/0 ரன்கள் எடுத்து இன்னும் 225 ரன்கள் பின்தங்கிய நிலையில் விளையாடி வருகிறது.

முன்னதாக கடைசியாக கடந்த 2020ஆம் ஆண்டு ரஞ்சி கோப்பையில் விளையாடியிருந்த கேதார் ஜாதவ் 3 வருடங்கள் கழித்து இப்போட்டியில் தான் முதல் முறையாக களமிறங்கினார். அதில் 283 ரன்களை விளாசி மாஸ் கம்பேக் கொடுத்துள்ள அவர் 2018க்குப்பின் முதல் முறையாக சதமடித்து ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்துள்ளார். கடந்த 2018 வாக்கில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி 2019 உலக கோப்பை இந்திய அணியிலும் விளையாடிய அவர் 2020க்குப்பின் பார்மை இழந்து தடுமாறியதால் கழற்றி விடப்பட்டார்.

இதையும் படிங்கபோட்டு குழப்பாதிங்க, 2023 உ.கோ வெல்ல ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் முடிந்ததும் அதை செய்ங்க – தேர்வு குழுவுக்கு ஸ்ரீகாந்த் கோரிக்கை

குறிப்பாக ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் ஒரு போட்டியில் பினிஷிங் செய்வதற்காக பீல்டர்களை எண்ணி கடைசியில் சொதப்பிய அவரை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கலாய்த்து தள்ளினார்கள். அதனால் சென்னை நிர்வாகம் கழற்றி விட்ட அவரை 2023 ஐபிஎல் ஏலத்திலும் 1 கோடி அடிப்படை விலையில் எந்த அணியும் வாங்கவில்லை. ஆனால் தற்போது உள்ளூர் கிரிக்கெட்டில் போராடி வரும் அவர் தன்னுடைய 2வது இரட்டை சதத்தை அடித்துள்ளதை பார்க்கும் ரசிகர்கள் யார் யாரோ இந்திய அணியில் கம்பேக் கொடுக்கிறார்கள் தலைவனும் நிச்சயம் 2023 உலகக்கோப்பையில் கம்பேக் கொடுப்பார் என்று கலகலக்கிறார்கள்.

Advertisement