IND vs SL : வீடியோ : அதிவேகத்தில் தெறிக்கவிட்ட உம்ரான் மாலிக். பெயில்ஸ் எங்க போயிருக்கு பாருங்க – அசந்து போயிடுவீங்க

Umran-Malik
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்று இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகித்திருந்தது.

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது நேற்று புனே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் என்று எதிர்பார்த்த வேளையில் இந்திய அணி அதிர்ச்சி தோல்வி அடைந்து இலங்கை அணியுடன் தொடரை தற்போதைய நிலையில் ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.

- Advertisement -

அந்த வகையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை அணியானது இந்திய அணியின் பந்துவீச்சை சுலபமாக எதிர் கொண்டு 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் குவித்து அசத்தியது. பின்னர் 207 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 190 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்த வெற்றியின் மூலம் இலங்கை இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. இந்நிலையில் இந்த போட்டியின் போது விளையாடிய இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான உம்ரான் மாலிக் தனது வேகத்தினால் இலங்கை வீரர்களை திணற வைத்தார் என்று கூறவேண்டும்.

- Advertisement -

மிகச் சிறப்பாக பந்துவீசிய அவர் இந்த போட்டியில் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதிலும் குறிப்பாக இரண்டு விக்கெட் கிளீன் போல்ட் முறையில் வந்தது. அதிலும் குறிப்பாக இலங்கை பேட்ஸ்மேனுக்கு எதிராக ஒரு பந்தினை அதிவேகத்தில் வீசிய உம்ரான் மாலிக் அவரை போல்டாக்கியதுடன் அந்த பந்து பட்டு ஸ்டம்பில் இருந்த பைலஸ் விக்கெட் கீப்பரை தாண்டி பறந்து விழுந்தது.

இதையும் படிங்க : PAK vs NZ : டி20 போட்டியை மிஞ்சிய பரபரப்பான டெஸ்ட், 1 விக்கெட் 15 ரன்னில் பறிபோன வெற்றி – கடைசி வரை வெல்லாத பாகிஸ்தான்

இதுகுறித்த வீடியோ தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் அதிகளவு பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. மேலும் உம்ரான் மாலிக்கின் வேகம் குறித்து அனைவரும் பாராட்டி வரும் வேளையில் இந்த தொடரிலும் அவர் தனது எக்ஸ்பிரஸ் வேகத்தின் மூலம் அசத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement