- Advertisement -
இந்திய கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை : அழைப்பு கிடைத்தும் ஆஸ்திரேலியா செல்லும் வாய்ப்பை இழந்த 2 வீரர்கள் – அடப்பாவமே

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை தொடரானது கோலாகலமாக துவங்கி நடைபெற்று வருகிறது. இன்றைய முதல் ஆட்டத்தில் இலங்கை மற்றும் நமீபியா அணிகள் மோதி வருகின்றன. இந்த டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஏற்கனவே ஆஸ்திரேலியா சென்றடைந்து பயிற்சி போட்டிகளிலும் விளையாடி முடித்துள்ளது.

அடுத்ததாக பாகிஸ்தான் அணிக்கு எதிராக அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள போட்டியில் இந்திய அணி மோத இருக்கிறது. இந்நிலையில் ஏற்கனவே ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணியுடன் தற்போது சற்று தாமதமாக முகமது சிராஜ், ஷர்துல் தாகூர் மற்றும் முகமது ஷமி ஆகியோர் இணைந்துள்ளனர்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக பும்ராவிற்கு பதிலாக முதன்மை இந்திய அணியில் முகமது ஷமி இடம் பெற்றுள்ளார். இந்நிலையில் இப்படி இந்திய அணியில் இருக்கும் வீரர்களை தவிர்த்து மேலும் சில ரிசர்வ் வீரர்களை இந்திய அணி இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்தது.

அந்த வகையில் இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான உம்ரான் மாலிக் மற்றும் குல்தீப் யாதவிற்கு ஆஸ்திரேலியா வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஏனெனில் ஏற்கனவே ரிசர்வ் வீரர்களாக இடம்பெற்றிருந்த ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரவி பிஷ்னாய் ஆகியோர் சையத் முஸ்தாக் அலி தொடரில் விளையாடுமாறு பிசிசிஐ கேட்டுக் கொண்டதால் அவர்களுக்கு பதிலாக இந்த இருவரும் அங்கு பயணிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் அணியிலிருந்து அழைப்பு கிடைக்கும் கடைசி நேரத்தில் அவர்கள் விசாவிற்கு விண்ணப்பித்ததால் ஆஸ்திரேலிய நாட்டின் நிர்வாகம் அவர்கள் இருவருக்கும் விசாவினை வழங்க மறுத்துள்ளது. இதன் காரணமாக வாய்ப்பு கிடைத்தும் அவர்கள் ஆஸ்திரேலியா செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க : அவரு விளையாடுறத பார்த்தா பொல்லார்டு மாதிரியே இருக்கு. அவ்ளோ பவர் வச்சிருக்காரு – டேவிட் வார்னர் புகழாரம்

கடைசி நேரத்தில் விசாவிற்கு விண்ணப்பித்ததால் ஆஸ்திரேலிய நிர்வாகம் அவர்களுக்கு விசா தர மறுத்ததில் தவறு ஏதும் இல்லை என்று கூறப்படுகிறது. ஏனென்றால் தற்போது ஆஸ்திரேலிய நாட்டில் உள்ள நடைமுறைப்படி சில விதிமுறைகள் கடைபிடிக்கப்படுவதால் ஆஸ்திரேலியாவுக்கு வரும் பயணிகள் அனைவருக்குமே சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by