அவரு விளையாடுறத பார்த்தா பொல்லார்டு மாதிரியே இருக்கு. அவ்ளோ பவர் வச்சிருக்காரு – டேவிட் வார்னர் புகழாரம்

Warner
- Advertisement -

கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரை வென்று தற்போது நடப்பு சாம்பியனாக ஆஸ்திரேலிய அணி தங்களது சொந்த நாட்டில் டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. கடந்த ஆண்டு விளையாடிய ஆஸ்திரேலியா அணியில் ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டு தற்போது மேலும் பலமாக ஆஸ்திரேலிய அணி கட்டமைக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டும் கோப்பையை வெல்லும் அணியாகவே ஆஸ்திரேலியா அணி பார்க்கப்பட்டு வருகிறது.

aus 1

- Advertisement -

அதிலும் குறிப்பாக இந்த ஆண்டு பின்வரிசையில் சிங்கப்பூரை பூர்வீகமாகக் கொண்ட டிம் டேவிட்க்கு ஆஸ்திரேலிய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதால் ஆஸ்திரேலிய அணி வழக்கமான பலத்தை விட கூடுதல் பலத்துடன் திகழ்கிறது.

சிங்கப்பூர் அணிக்காக அறிமுகமாகி விளையாடியிருந்த டிம் டேவிட் அதன் பிறகு ஆஸ்திரேலியா நாட்டிற்கு குடி பெயர்ந்து தற்போது ஆஸ்திரேலிய நாட்டின் குடிமகனாக மாறிவிட்டதால் அவருக்கு தேசிய கிரிக்கெட் அணியில் வாய்ப்பு கிடைத்தது. உலகெங்கிலும் நடைபெற்று வரும் டி20 லீக்குகளில் தனது அதிரடியின் மூலம் பவுலர்களை அலற வைத்து வரும் டிம் டேவிட் சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணிக்காக அறிமுகமாகிய சில போட்டிகளிலேயே தனது பவரை காட்டியுள்ளார்.

Tim David

நடைபெற்று முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் கூட அவரின் ஒரு சில ஆட்டங்கள் மிகச் சிறப்பாக இருந்தது. இந்நிலையில் டிம் டேவிடின் இந்த அதிரடியான ஆட்டத்தை பாராட்டி பேசியுள்ள ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரரான டேவிட் வார்னர் கூறுகையில் : டிம் டேவிட் அவருக்குள் பெரிய பவரை வைத்திருக்கிறார். மிகச் சிறந்த மனிதராகவும் இருக்கிறார்.

- Advertisement -

இந்த இரண்டு விடயங்களை பார்க்கும்போது எனக்கு பொல்லார்டு தான் ஞாபகத்திற்கு வருகிறார். அதோடு கூடுதலாக பவுலிங் செய்யும் இவரது அனைத்து சுபாவங்களையும் பார்க்கும்போது எனக்கு பொல்லார்டு நினைவுக்கு வருகிறார். அவரோடு சேர்ந்து நான் விளையாடும் போது எனது ஷர்ட்டுகள் மிகச் சிறியதாக தெரிகின்றன. அந்த அளவிற்கு டிம் டேவிட் பவராக பெரிய பெரிய ஷாட்களை விளையாடுகிறார்.

இதையும் படிங்க : கடந்த ஒரு ஆண்டாக காயமே அடையாமல் பிட்டாக இருக்கும் ஒரே வீரர் இவர்தான் – பி.சி.சி.ஐ வெளியிட்ட தகவல்

பவுண்டரிகளை கூட சிக்ஸராக மாற்றும் அபார திறமை அவரிடம் இருக்கிறது. ஐபிஎல் போட்டிகளில் தான் நான் அவரை முதல் முறை பார்த்தேன். அப்போதே அவரது ஆட்டம் மிகச் சிறப்பாக இருப்பதை கவனித்தேன். இம்முறை ஆஸ்திரேலிய அணிக்கு பின் வரிசையில் களமிறங்கி முக்கிய வீரராக அவர் எங்களுக்கு வெற்றிகளை பெற்று தருவார் என வார்னர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement