டெஸ்ட் போட்டியில் நடுவர்கள் மற்றும் வீரர்கள் இதை செய்யலாமா..!

umpires
- Advertisement -

கடந்த ஜூன் 16 ஆம் தேதி நடந்த இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டிஸ் இடையே டெஸ்ட் போட்டி நடிபெற்றது. இந்த போட்டியின் 3 ஆம் நாளின் போது இரண்டாம் நாள் பயன்படுத்திய பந்தை பயன்படுத்த மாட்டோம் என்று நடுவர்களிடம் வாக்குவாதம் செய்து, இலங்கை அணி வீரர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் போட்டி தொடங்க இரண்டு மணி நேரம் தாமதமாக தொடங்கியது. இலங்கை அணி வீரர்கள் நடுவர்களிடம் செய்த இந்த பிரச்சனை போன்று பல முறை கிரிக்கெட் வரலாற்றில் பல போட்டிகளில் நடந்தேறி உள்ளது.

sri-lanka-vs-west-indies

- Advertisement -

1999 ஆம் ஆண்டு (இலங்கை vs இங்கிலாந்து):- இந்த போட்டியில் முத்தையா முரளிதரன் பந்து வீசி கொண்டிருக்கும் போது, இலங்கை அணியின் கேப்டனாக இருந்த ரணதுங்கா தான் நின்ரிறுந்த இடத்தில் இருந்து வேறு இடத்தில் நின்றதால் நோ பால் அளிக்கப்பட்டது. இதனால் ரணதுங்கா நடுவர்களிடம் 12 நிமிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அத்துடன் அனைத்து வீரர்களும் சிறிது நேரம் பவுண்டரி லைனின் நிக்கி வைக்கபட்டனர்.இந்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ranathunga

1983 ஆம் ஆண்டு (பாகிஸ்தான் vs இந்தியா):- இந்தியா-பாகிஸ்தான் என்றாலே அந்த போட்டியில் பஞ்சமிருக்காது. 1983 ஆம் ஆண்டு நடந்த டெஸ்ட் போட்டி ஒன்றில், பாகிஸ்தான் அணி பீல்டிங் செய்து கொண்டு இருந்தது. அப்போது சற்று தூறல் வீசியதால் பாகிஸ்தான் அணியின் சாஹீர் அப்பாஸ் நடுவர்ளிடம் பந்து வீச சிரமமாக உள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால் நடுவர் குறைந்தது 77 ஓவர்களாக விசு வேண்டும், அதுமட்டுமல்லாமல் எதிரணி ஒப்புக் கொண்டால் தான் போட்டியை நிறுத்த முடியும் என்று கூறியுள்ளார். ஆனால், பாகிஸ்தான் அணி நடுவர்கள் பேச்சை கேட்காமல் மைதானத்தில் இருந்து வெளியேறி இருக்கின்றனர். இதனால் போட்டி ட்ராவில் முடிந்துள்ளது.

indiapak

1989 ஆம் ஆண்டு(நியூஸிலாந் vs வெஸ்ட் இண்டீஸ்) :- இந்த போட்டியின் போது நியூஸிலாந் அணியின் கேப்டனாக இருந்த ஜ்யோஃப் ஹவார்த் அடித்த பந்து கீபரிடம் தஞ்சம் புகுந்தது. ஆனால், அது அவுட் என்று வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் அப்பீல் செய்தனர். ஆனால் நடுவர் அவுட் என்று அருவிக்கத்தால் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் தொடரில் இருந்தே விலக முடிவெடுத்தனர். பின்னர் போட்டியை நடத்திய அமைபளர்கள் எப்படியோ அவர்களை சமாதானம் செய்து வைத்தனர்.

Advertisement