தேவையில்லாத வேலை செய்யாதப்பா, உனக்கு அவ்வளவு தான் லிமிட்.! இந்திய வீரரை கூப்பிட்டு எச்சரித்த நடுவர்

Kohli
- Advertisement -

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் விராட்கோலி ஒரு நூதனமான முறையை மேற்கொண்டார். இந்த போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில் இந்திய அணி 200 ரன்கள் எடுத்திருந்தால் வெற்றி பெற்று இருக்கலாம். ஆனால் 124 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதனால் இந்திய அணி துவக்கத்திலேயே விக்கெட்டுகள் எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. இந்திய அணி பந்து வீசும்போது முதல் 3 ஓவர்களில் விக்கெட் விழவில்லை.

Williamson-1

- Advertisement -

இதனால் வித்தியாசமாக நியூசிலாந்து வீரர்களுக்குள் குழப்பம் ஏற்படுத்த முயன்றார் இந்திய கேப்டன் விராட் கோலி. இரண்டாவது ஆட்டத்தில் 4-வது ஓவரில் நியூசிலாந்து தொடக்க வீரர்கள் பந்தை அடித்துவிட்டு ஒரு ரன் ஓடிக் கொண்டிருந்தனர். அப்போது இந்திய வீரர் விராட் கோலி ‘இரண்டு’ என மிகக் சத்தமாக கத்தினார். அதாவது இரண்டு ரன்கள் ஓட வேண்டும் என நியூசிலாந்து வீரர் கூறுவது போல் சத்தமாக கத்தி அவர்களுக்குள் குழப்பத்தை ஏற்படுத்த முயன்றார்.

இதனை கண்ட கள நடுவர் ரிசார்ட் உடனடியாக கேப்டன் விராட் கோலியை அழைத்து ‘இரண்டு’ என கத்த வேண்டாம் என்றார். அதற்கு விராட் கோலி மறுத்துக் கூறினார் . ஆனால் மீண்டும் நீங்கள் இரண்டு என கத்திணீர்கள் இதுபோல் இவ்வாறு செய்யக்கூடாது எனவும் கூறினார். பின்னர் அதனை சமாளிக்கும் வகையில் விராட் கோலி பேசினால் அதாவது பைன் லெக்கில் இருக்கும் பீல்டரை எச்சரிக்கவே நான் இரண்டு என கத்தினேன் என்று கூறினார்.

kohli 2

இதனை மறுத்த அம்பயர் நீங்கள் அப்படி கூறவே இல்லை, இங்குதான் கத்தினீர்கள் என்று விராட் கோலியை எச்சரித்து அனுப்பினார் இந்த விஷயம் களத்தில் சற்று சலசலப்பை ஏற்படுத்தியது. மேலும் அந்த விடயம் தற்போது இணையத்தில் விடியோவாகவும் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement