கொல்கத்தா அணிக்காக கடந்த 8 வருடமாக விளையாடி வருபவர் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரேன். இவருக்கு தற்போது ஐபிஎல் தொடரில் விளையாட முடியாதபடி ஒரு ஆபத்து ஏற்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையே ஒரு போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். இதனையடுத்து தினேஷ் கார்த்திக் 58 ரன்களும், இளம் வீரர் சுபமன் கில் 57 ரன்கள் அடிக்க கொல்கத்தா அணி 20 ஓவர்களின் முடிவில் 164 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் எதிர்த்து விளையாடியது.
அந்த போட்டியில் பஞ்சாப் அணியின் கேப்டன் ராகுல் 64 ரன்களும் மயாங்க் அகர்வால் 56 ரன்கள் எடுத்தார்கள். அடுத்தடுத்து வந்த வீரர்கள் தங்களது விக்கெட்டை அடுத்தடுத்து இழந்ததால் கடைசியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்று விட்டது. இந்த போட்டியில் பஞ்சாப் அணியின் பேட்டிங் ஆர்டரில் செய்த மாற்றமே தோல்விக்கு காரணமாக அமைந்தது.
இந்த போட்டியில் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தவர் சுனில் நரைன். இந்நிலையில் இவரது பந்துவீச்சு சர்ச்சைக்கு உரிய முறையில் விதிமுறைகளை மீறி உள்ளதாக நடுவார்களால் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இவரது பந்துவீச்சு பந்தை எறிவது போல் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு அதன்பின்னர் தனது பந்து வீசும் விதத்தை மாற்றினார்.
தற்போது மீண்டும் அவரது பந்துவீச்சு சர்ச்சைக்குரிய முறையில் இருப்பதாக நடுவர்கள் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது ஒருவேளை இவர் இந்த வருட ஐபிஎல் தொடரில் அவர் பந்துவீச தடை செய்யப்பட்டால் இது கொல்கத்தா அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.