அவுட் கொடுக்கல. மூக்கை சொரிஞ்சேன் சீரியஸான இடத்தில் காமெடி செய்த அம்பயர் – வைரலாகும் வீடியோ

BBL

இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெறுவதை போன்று ஆஸ்திரேலியாவில் பிக்பாஸ் கிரிக்கெட் தொடர் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. பரபரப்பும் விறுவிறுப்பும் சற்றும் குறைவில்லாமல் செல்லும் இந்த தொடரின் ஒரு போட்டியில் அடிலெய்ட் மற்றும் மெல்போர்ன் அணிகள் மோதிய ஒரு போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் அடிலெய்டு அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த போட்டியில் அம்பயர் செய்த ஒரு காமெடி தற்போது வீடியோவாக வைரலாகி வருகிறது. அது யாதெனில் போட்டியின் 17வது ஓவரில் அடிலெய்டு வீரர் ரஷித் கான் வீசினார் .அப்போது பேட்ஸ்மேன் காலில் வாங்க ரஷித் கான் எல்பிடபிள்யூ கேட்டார்.

அதனை பார்த்துக் கொண்டிருந்த அம்பயர் முதலில் அவுட் கொடுப்பது போன்று கையை தூக்கி கடைசியில் தனது மனதை மாற்றிக் கொண்டு மூக்கை சொரிந்தார். மேலும் அம்பயர் கைதூக்கியவுடன் ரசித் கான் விக்கெட்டை கொண்டாட ஆரம்பித்துவிட்டார். அதன் பின்னர் அம்பயர் அவுட் கொடுக்கவில்லை மூக்கை சொரிந்தேன் என்பது போன்று தனது செயலை வெளிப்படுத்தினார்.

இதன் பிறகு இந்த விவகாரம் குறித்து பேசிய ரஷித் கான் முதலில் அம்பயர் அவுட் கொடுத்தார் என்று நினைத்தே நான் கொண்டாட தொடங்கினேன். ஆனால் அவர் இவ்வாறு செய்தது எனக்கு சற்று அதிர்ச்சியை தந்தது என்றும் ரஷீத் கான் கூறியது குறிப்பிடத்தக்கது