வொயிடு குடுக்க கைநீட்டிய அம்பயர். தோனி விட்ட லுக். முடிவே மாறிடிச்சி – வைரலாகும் வீடியோ

Dhoni-umpire

ஐபிஎல் தொடரின் 29 ஆவது லீக் போட்டி நேற்று துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுக்கும் முக்கியமான போட்டி என்பதால் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த போட்டி நேற்று நிறைவடைந்தது. இந்த போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்த சிஎஸ்கே அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

cskvssrh

இந்நிலையில் இந்த போட்டியின்போது சர்ச்சைக்குரிய விடயம் அரங்கேறியது. அதாவது 19-வது ஓவரை வீசிய சிஎஸ்கே அணியின் வீரர் தாகூர் அந்த ஓவரின் இரண்டாவது பந்தினை வொயிட் லைனை நோக்கி அகலமாக வீசினார். அதனால் அந்தப் பந்து வொயிட் என்பது போல தெரிந்தது. அதனால் அம்பயர் வொயிட் கொடுப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். அதேபோன்று அம்பயர் கையை அகலமாக விரித்து வொயிட் சொல்வதற்கு தயாராகி திரும்பினார்.

ஆனால் அப்போது ஸ்டம்பின் பின்னால் இருந்த சிஎஸ்கே அணி கேப்டன் தோனி கடும் கோபத்துடன் முறைத்தபடியே அம்பயரை நோக்கி ஏதோ சொன்னார். இதை பார்த்த அம்பயர் ஒரு நொடி யோசித்து விரித்த கையை அப்படியே கீழே இறக்கி தனது பாக்கெட்டில் விட்டுக் கொண்டார். இதனை மைதானத்தில் வெளியில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பார்த்ததும் கோபமாகி விட்டார்.

என்ன நடக்கிறது மைதானத்தில் என்று கையை அகற்றி தனது கோபத்தினை டக் அவுட்டில் இருந்தபடியே வார்னர் வெளிப்படுத்தினார். அம்பயரின் இந்த செயல் ரசிகர்களுக்கும் சற்று ஏமாற்றத்தை அளித்தது. ஏனெனில் வொயிட் கூறுவதற்காக அம்பயர் கையை விரித்து தயாரான அவர் உடனே தோனியின் முகத்தை பார்த்து விட்டு வொயிட் கொடுக்காமல் விட்டது தவறு என்று தங்களது கருத்துக்களை சமூக வலை தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

- Advertisement -

மேலும் வெற்றிக்கு முக்கியமான ஓவரில் நிற்கும் ஹைதராபாத் அணிக்கு எதிராக அவர் செய்த இந்தச் செயல் தற்போது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. மேலும் இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் அணி தோல்வியைத் தழுவியது. களத்தில் நிற்கும் அம்பயரிடம் தோனி இது போன்று தனது அதிருப்தியை காட்டுவது முதல் முறை அல்ல. கடந்த முறை ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கூட மைதானத்திற்குள் வந்து தோனி வாக்குவாதத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.