RCB vs SRH : கதவை உடைத்த அம்பயர் விவகாரத்தில் முக்கிய முடிவினை எடுத்து – பி.சி.சி.ஐ

ஐ.பி.எல் தொடரின் 54 ஆவது போட்டி சின்னசாமி மைதானத்தில் பெங்களூருவில் நடந்தது. இந்த போட்டியில் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ்

Kohli-2
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 54 ஆவது போட்டி சின்னசாமி மைதானத்தில் பெங்களூருவில் நடந்தது. இந்த போட்டியில் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும் மோதின.

williamson

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது பெங்களூரு அணி. அதன்படி முதலில் விளையாடிய சன் ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக வில்லியம்சன் ஆட்டமிழக்காமல் 43 பந்துகளில் 70 ரன்களை குவித்தார்.

இதனால் 176 ரன்கள் என்ற வெற்றி என்ற இலக்குடன் பின்னர் ஆடிய பெங்களூரு அணி 19.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்களை அடித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஹெட்மயர் 75 ரன்களும், குர்கிரத் சிங் 65 ரன்களையும் குவித்தனர். ஹெட்மயர் ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

இந்த போட்டியின் இறுதி ஓவரில் வில்லியம்சன் முதல் 4 பந்தில் 20 ரன்களை குவித்தார். அதற்கடுத்து 5 ஆவது பந்தினை உமேஷ் யாதவ் வீச அந்த பந்தினை அம்பயர் நோபால் என்று அறிவித்தார். ஆனால், பந்து நோபால் இல்லை என்று உமேஷ் யாதவ் அம்பயரிடம் வாக்குவாதம் செய்தார். இதனை கண்ட விராட் கோலி அம்பயரின் அருகில் வந்தார்.

- Advertisement -

Kohli

ஆனால், அம்பயர் தனது முடிவில் இருந்து பின்வாங்கவில்லை. அதனால் கோலி அம்பயரை முறைத்தவாறு போட்டி முடிந்து சென்றுவிட்டார். ஆனால், விராட் கோலி தன்னிடம் வாக்குவாதம் செய்யவந்ததை நினைத்துக்கொண்டே ஓய்வறைக்கு சென்ற அம்பயர் அங்கிருந்த கண்ணாடி கதவை தனது காலால் எட்டி உதைத்தார். இதனால் அந்த கதவு உடைந்தது.

Kohli 1

இதையடுத்து கர்நாடக கிரிக்கெட் சங்கம் இந்த சம்பவம் குறித்து ஐ.பி.எல் நிர்வாகத்திடம் முறையிட இந்த சம்பவத்தில் அம்பயரின் தவறு உறுதிசெய்யப்பட்டு அவருக்கு அபராதத்தினை விதித்தது. அதன்காரணமாக உடைத்த கதவை மாற்ற ரூபாய் 5000 அபராதமாக விதிக்கப்பட்டது. அதனை அம்பயர் தனது ஊதியத்திலிருந்து கட்டிவிட்டார் என்ற செய்தியும் வெளியாகியுள்ளது.

Parthiv

கதவை உடைத்த சர்ச்சைக்காக நைஜல் அபராத பணத்தை கட்டி விட்டார். ஆனால் இந்த ஐபிஎல் தொடரில் அவரது செயல்பாடு சிறப்பாக இருக்கிறது. ஒரு மனிதருக்கு இயல்பான கோபம் எப்படி வருமோ அதே போன்று தான் அவருக்கும் வந்துள்ளது. அதனால் அவர் கோபத்தில் செய்த விடயத்தை பெரிதுபடுத்த வேண்டாம் அவருடைய அபராதமும் திரும்ப பெறப்படும் இந்த பிரச்சனை இத்தோடு முடித்துவிடலாம் என்று இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ தெரிவித்துள்ளது

Advertisement