ஈ சாலா கப் நமதே. இந்தமுறை ரசிகர்களை ஏமாற்றமாட்டோம். நிச்சயம் நாமதான் சாம்பியன் – அடித்து கூறிய ஆர்.சி.பி வீரர்

Rcb

விராட் கோலி, ஏபி டிவில்லியர்ஸ் என நட்சத்திர வீரர்கள் பலர் இருந்தபோதும் பெங்களூர் அணி தொடர்ந்து தோல்விகளையே சந்தித்து வருகிறது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் “ஈ சாலா கப் நமதே” என சபதம் எடுத்துக் கொண்டு விளையாடினாலும் பெங்களூர் அணி தோல்வியை தழுவுவது வழக்கமாயிற்று. கடந்த ஆண்டுகூட துவக்கத்தில் பலமாக பார்க்கப்பட்ட பெங்களூரு அணி தொடரின் முடிவில் கடைசி இடத்தைப் பிடித்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

RCB2019

இருப்பினும் பெங்களூரு அணியின் மீது உள்ள ஈர்ப்பு ரசிகர்களுக்கு குறையவே இல்லை. அந்த அளவிற்கு அவர்கள் தொடர்ந்து பெங்களூர் அணிக்கு ஊக்கத்தைக் கொடுத்து வருகின்றனர். மேலும் இதுவரை ஐபிஎல் வரலாற்றில் மூன்று முறை மட்டுமே இறுதிப்போட்டிக்கு பெங்களூர் அணி சென்றுள்ளது. கடைசியாக 2016ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக இறுதிப்போட்டியில் விளையாடி தோல்வியுற்றது. அதற்கு முன்னர் 2009, 2011 ஆம் ஆண்டுகளில் இறுதிப்போட்டிக்கு சென்றுள்ளது.

இந்நிலையில் தற்போது இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்காக ஆர்சிபி பலமாக தயாராகி வருகிறது. இம்முறையாவது கோப்பையை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கும் நிலையில் கட்டாயம் கோப்பையை கைப்பற்றும் என பெங்களூர் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

Rcb

ரசிகர்கள் எங்கள் மீது அதிக நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். ஆனால் அனைத்து தொடர்களிலும் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆனால் இன்றுவரை நாங்கள் கோப்பையை கைப்பற்றவில்லை ஒவ்வொரு முறையும் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆனால் இம்முறை அவர்களை ஏமாற்ற மாட்டோம்.

- Advertisement -

நாங்கள் தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்தாலும் ரசிகர்கள் எங்களுக்கு தரும் ஆதரவை நிறுத்தியதே இல்லை. அவர்களுக்காகவே இந்த வருடம் நாங்கள் கோப்பையை வெல்வது உறுதி மேலும் பெங்களூர் அணி எப்போதும் கடுமையான போராட்டத்தை தந்து வரும் ஒரு அணி இம்முறையும் நாங்கள் சிறப்பாக செயல்படுவோம். எங்களிடம் சாகல், மொயின் அலி, வாஷிங்டன் சுந்தர் என சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் இருக்கின்றனர்.

Steyn-1

மேலும் டேல் ஸ்டைன், மோரிஸ், நவதீப் சைனி மற்றும் நான் என வேகப் பந்து வீச்சிலும் சிறப்பான வீரர்களை கொண்டுள்ளோம். இதனால் எங்களால் எதிரணியை மிரட்ட முடியும் மேலும் இம்முறை பேட்டிங்கிலும் வலு சேர்த்துள்ளதாக பெங்களூரு அணி நிச்சயம் ரசிகர்களின் கனவை நினைவாக்க இந்த கோப்பையை கைப்பற்றும் என உமேஷ் யாதவ் கூறியது குறிப்பிடத்தக்கது.