IND vs AUS : நிலக்கரி அள்ளும் தொழிலாளி மகனான அவருக்கு சிறப்பாக செயல்பட்டும் வாய்ப்பு மறுப்பது ஏன்? டிகே ஆதங்க கேள்வி

Dinesh-Karthik-1
- Advertisement -

இந்தியா போன்ற மிகப் பெரிய மக்கள் தொகை கொண்ட நாட்டை சர்வதேச கிரிக்கெட்டில் பிரதிபலிக்கும் இந்திய அணியில் கடுமையான போட்டி நிலவுவதால் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு கூட நிலையான வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அதற்கு எடுத்துக்காட்டாக உமேஷ் யாதவை சொல்லலாம். நிலக்கரி சுரங்கத்தில் வேலை செய்யும் கூலி தொழிலாளியின் மகனான அவர் ஆரம்பத்தில் போலீஸ் வேலைக்கு முயற்சித்து கிடைக்காததால் பின்னர் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி கடந்த 2010ஆம் ஆண்டு இந்தியாவுக்காக அறிமுகமானார். அதிரடியான வேகத்தில் பந்து வீசும் திறமை பெற்ற அவர் ஆரம்பத்திலேயே மிகச்சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி முதன்மை பவுலராக உருவெடுத்தார்.

Umesh Yadav 1

குறிப்பாக 2015ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையில் அதிக விக்கெட்டுகளை எடுத்த இந்திய பவுலராக உமேஷ் யாதவ் சாதனை படைத்தார். இருப்பினும் அதன் பின் ஐபிஎல் தொடரில் ரன்களை வாரி வழங்கி சுமாராக செயல்பட்டதால் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் கழற்றி விடப்பட்ட அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டும் பும்ரா, ஹர்டிக் பாண்டியா போன்றவர்களின் வருகையால் நிலையான இடத்தை பெற முடியவில்லை. அதனால் பெரும்பாலான போட்டிகளில் 3 – 4 விக்கெட்டுகளை எடுத்தும் பும்ரா, ஷமி உள்ளிட்ட முதன்மை வீரர்கள் ஓய்வெடுக்கும் போது அல்லது காயமடைந்தால் மட்டுமே விளையாடும் 11 பேர் அணியில் உமேஷ் யாதவ் வாய்ப்பு பெற்று வருகிறார்.

- Advertisement -

டிகே அதிருப்தி:
ஆனாலும் எந்த விமர்சனங்களையும் செய்யாமல் அணிக்காக கிடைக்கும் வாய்ப்புகளில் அசத்தும் அவர் இந்த பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரின் போது தனது தந்தை இறந்ததால் அணியிலிருந்து வெளியேறி தன்னுடைய கடமைகளை ஆற்றி விட்டு மீண்டும் இணைந்தார். அதைத் தொடர்ந்து இந்தூரில் நடைபெற்ற 3வது போட்டியில் வாய்ப்பு பெற்ற அவர் அதிரடியாக 17 (13) ரன்கள் குவித்து முதல் இன்னிங்ஸில் இந்தியாவை 100 ரன்கள் தாண்ட உதவினார்.

அதை விட தாறுமாறாக சுழன்றதால் ஸ்பின்னர்கள் ராஜாங்கம் நடத்திய பிட்ச்சில் அற்புதமாக ஸ்விங் செய்து 3 விக்கெட்டுகளை எடுத்த அவர் சிறப்பாக செயல்பட்டும் இறுதியில் இந்தியா தோற்றதால் 4வது போட்டியில் வாய்ப்பு கிடைப்பது கடினமாகவே பார்க்கப்படுகிறது. அப்படி சிறப்பாக செயல்பட்டும் உமேஷ் யாதவிற்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காதது ஏமாற்றமளிப்பதாக தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். இது பற்றிய கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அவருடைய போராட்ட வழிகளை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நிலக்கரி சுரங்க தொழிலாளி மகனான அவர் போலீஸ் வேலைக்காக முயற்சித்தார். அது வேலைக்கு ஆகாததால் வேகப்பந்து வீச்சாளராக மாறிய அவர் 2008 முதல் விதர்பா அணிக்காக உள்ளூர் கிரிக்கெட்டில் சிறந்து விளையாடி 2010ஆம் ஆண்டு இந்திய அணிக்காக விளையாடத் துவங்கினார். அந்த வகையில் வேகமான வளர்ச்சியை பெற்ற அவர் அதன் பின்பும் ஒரு குறிப்பிட்ட புள்ளி வரை சிறப்பாக சென்றார். ஆனால் அப்போது எந்த ஒரு கிரிக்கெட் வீரருக்கும் இது நடந்தால் நீங்கள் கடினமாக உணர்வீர்கள்”

Dinesh-Karthik-1

“அதற்காக அவரும் வருத்தப்பட்டிருப்பார். பும்ரா – ஷமி ஆகியோர் உங்களுடைய முதன்மை 2 பவுலர்களாக உருவெடுத்த போது 3வது இடத்துக்கான போட்டி உமேஷ் மற்றும் இசாந்த் சர்மா ஆகியோரிடையே ஏற்பட்டது. அதை தவிர்த்த எஞ்சிய நேரங்களில் இஷாந்த், ஷமி, உமேஷ் ஆகியோர் இருந்தனர். ஆனால் இந்திய சூழ்நிலைகளில் 2 வேகப்பந்து வீச்சாளர்கள் தேவைப்படும் போது அது இஷாந்த் – ஷமியாக இருந்தனர். அதனால் பல தருணங்களில் சிறப்பாக செயல்பட்டும் இந்திய அணி கண்டுகொள்ளாதது அவரை நிச்சயமாக காயப்படுத்தியிருக்கும். ஏனெனில் அவர் பெரும்பாலான தருணங்களில் 2 – 3 விக்கெட்டுகளை எடுத்து நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியும் நிலையான இடத்தைப் பிடிக்கவில்லை”

இதையும் படிங்க:பேசாம பும்ராவ மறந்துட்டு டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் அவருக்கு சான்ஸ் கொடுங்க – மதன் லால் கோரிக்கை

“அவர் வெளியே தூக்கி எறியப்பட்டார். அதை விட ஐபிஎல் தொடரிலும் கழற்றி விடப்பட்டது அவரை மேலும் காயப்படுத்தியிருக்கும்” என்று கூறினார். இருப்பினும் தொடர்ந்து போராடி வரும் உமேஷ் யாதவ் 2022 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக 12 போட்டிகளில் 16 விக்கெட்டுகளை 7.06 என்ற சிறப்பான எக்கனாமியில் எடுத்தது போல இந்திய அணியிலும் முடிந்தளவுக்கு சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement