IND vs AUS : முகமது ஷமிக்கு பதிலாக மாற்றுவீரர் யார் தெரியுமா? – இவருக்கு தான் அந்த வாய்ப்பாம்

shami
- Advertisement -

டி20 உலக கோப்பை தொடருக்கு முன்பாக இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியானது இங்கு மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி செப்டம்பர் 20-ஆம் தேதி மொஹாலி மைதானத்திலும், இரண்டாவது டி20 போட்டியில் செப்டம்பர் 23-ஆம் தேதி நாக்பூர் மைதானத்திலும், மூன்றாவது டி20 போட்டி செப்டம்பர் 25-ஆம் தேதி ஹைதராபாத் மைதானத்திலும் நடைபெற இருக்கிறது.

Shami-1

இந்த மூன்று போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்தியானது தற்போது மொஹாலி மைதானத்திற்கு சென்றடைந்த வேளையில் அங்கு வீரர்களுக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவர் இந்த தொடரில் பங்கேற்பது சிக்கலாகியுள்ளது.

- Advertisement -

இதன் காரணமாக அவருக்கு பதிலாக மாற்று வீரரை உடனடியாக அறிவித்தாக வேண்டிய கட்டாயத்தில் பி.சி.சி.ஐ உள்ளது. இப்படி ஒரு நிலையில் முகமது ஷமிக்கு பதிலாக மூன்றரை ஆண்டுகள் கழித்து மீண்டும் உமேஷ் யாதவ் அணிக்கு டி20 அணிக்கு திரும்ப இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Umesh

பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் காயத்திற்கான சிகிச்சையை மேற்கொண்டு வந்த உமேஷ் யாதவ் தற்போது முழு உடற்தகுதியுடன் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவதால் அவரே இந்த ஆஸ்திரேலியா டி20 தொடருக்காக அணியில் இடம் பெறுவார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

டி20 கிரிக்கெட்டில் கடைசியாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற போட்டியில் விளையாடிய உமேஷ் யாதவ் அதன் பிறகு கிட்டத்தட்ட மூன்றரை ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப இருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : IND vs AUS : கொரோனா தொற்றால் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டி20 தொடரில் இருந்து விலகவுள்ள இந்திய வீரர்

இந்திய அணியின் நிர்வாகமும் உமேஷ் யாதவை அணிக்குள் கொண்டுவர முனைப்பு காட்டுவதால் நிச்சயம் முகமது ஷமிக்கு பதிலாக மாற்று வீரராக உமேஷ் யாதவ் தான் அணியில் இடம் பிடிப்பார் என்று கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்றும் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement