IND vs AUS : கொரோனா தொற்றால் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டி20 தொடரில் இருந்து விலகவுள்ள இந்திய வீரர்

INDvsAUS
- Advertisement -

அடுத்த மாதம் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற உள்ள டி20 உலக கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய அணியானது ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்தியாவில் நடைபெறவிருக்கும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நாளை மறுதினம் செப்டம்பர் 20-ஆம் தேதி துவங்கி செப்டம்பர் 25-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

INDvsAUS

- Advertisement -

உலக கோப்பை தொடருக்கு முன்பாக நடைபெற உள்ள இந்த டி20 தொடர் இந்திய அணிக்கு மிக முக்கியமான தொடராக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்த தொடரில் இந்திய அணி வீரர்களின் செயல்பாடு எவ்வாறு இருக்கப் போகிறதோ அதை போன்று தான் உலகக்கோப்பை தொடரிலும் செயல்படுவார்கள் என்பதனால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு தற்போது உச்சத்தை தொட்டுள்ளது.

இந்நிலையில் இந்த ஆஸ்திரேலியா டி20 தொடருக்காக இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டிருந்த அனுபவ வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி இந்த தொடரில் இருந்து விலக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Shami-1

ஏனெனில் ஆஸ்திரேலிய தொடருக்கு முன்பாக இந்திய வீரர்களுக்கு எடுக்கப்பட்ட கோவிட் டெஸ்டில் முகமது ஷமிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் இந்த டி20 தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் விளையாடிய ஷமி அதன் பிறகு இந்திய அணியில் இருந்து நிராகரிக்கப்பட்டு வந்தார்.

- Advertisement -

இந்நிலையில் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் மீண்டும் முதன்மை அணியில் ஷமி இடம்பிடித்திருந்த வேளையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இந்த தொடரையும் இழக்க உள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கெதிரான இந்த டி20 தொடரில் நிச்சயம் பிளேயிங் லெவனில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் முகமது ஷமிக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலை பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளது.

இதையும் படிங்க : வரலாற்றின் முதல் டி20 உலக கோப்பையிலும் 2022 டி20 உலக கோப்பையிலும் விளையாடும் 4 வீரர்களின் பட்டியல்

இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்திய அவருக்கு உலக கோப்பை அணியில் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று ஒரு பக்கம் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வரும் வேளையில் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் அவர் ஸ்டான்ட் பை வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement