நான் ஒருநாள் போட்டிகளில் விளையாடாமல் போனதற்கு இவர்கள் தான் காரணம் – உமேஷ் யாதவ் பேட்டி

Umesh
- Advertisement -

இந்திய அணியின் டெஸ்ட் போட்டிகளில் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக இருப்பவர் உமேஷ் யாதவ். இவருக்கு தற்போது 32 வயதாகிறது. தற்போது வரை 46 டெஸ்ட் போட்டிகளிலும், 75 ஒருநாள் போட்டிகளிலும், 7 டி20 போட்டிகளிளும் இந்திய அணிக்காக ஆடி உள்ளார்.

Umesh

- Advertisement -

இதில் டெஸ்ட் போட்டிகளில் 144 விக்கெட்டுகளும் ஒருநாள் போட்டிகளில் 106 விக்கெட்டுக்களையும் வீழ்த்தி உள்ளார். இந்நிலையில் இவர் ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் இடம் கிடைக்காதது குறித்த கவலையை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது : ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு தொடர் முழுவதும் எனக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். அவ்வாறு ஒரு தொடர் முழுவதும் விளையாட வாய்ப்புக் கிடைத்தால்தான் ஒரு விக்கெட் வீழ்த்தும் பந்துவீச்சாளர் என்பதை நிரூபிப்பேன். என்னை தேர்வு செய்தவர்கள் ஒருநாள் போட்டிகளில் என்னை சரியாக பயன்படுத்தவில்லை.

Umesh-4

ஆடும் லெவனில் இடம் பிடித்து விட்டு அடுத்த ஆறு மாதங்கள் அணிக்கு வெளியே உட்கார்ந்தால் அது மிகவும் கடினமாக இருக்கும். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாது. கிரிக்கெட்டில் எப்போதும் ஏற்ற இறக்கம் இருக்கத்தான் செய்யும்.

- Advertisement -

2015ஆம் ஆண்டு சிறப்பாக ஆடினேன். அதற்கு பின்னர் எனக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. தொடர்ந்து அதிக வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. அவ்வப்போது கிடைக்கும் ஒரு சில வாய்ப்புகள் வைத்துக்கொண்டுதான் செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார் உமேஷ் யாதவ். எனக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்தால் தானே என்னை நிரூபிக்க முடியும் என்று கூறியுள்ளார்.

Umesh 3

இந்திய அணியில் எப்போதுமே இதுபோன்ற குறை இருந்து கொண்டுதான் வருகிறது. குறிப்பாக நன்றாக விளையாடும் வீரர்களுக்கு தேர்வாளர்கள் பிடிக்காமல் போய் இருந்தாலும் அவர்கள் அணியில் சேர்க்கப்படுவதில்லை. இதேபோன்று பல இந்திய வீரர்களுக்கு இந்த சூழ்நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement