எனக்கு பிடித்த 2 பேட்ஸ்மேன்கள் என்றால் அது இவர்கள் தான். அவர்கள் 2 பேருமே இந்தியர்கள் – உமர் குல் தேர்வு

- Advertisement -

இந்தியா என்றாலே பேட்ஸ்மேன்கள் தான் என்ற அளவிற்கு இந்தியா எண்ணற்ற பேட்ஸ்மேன்களை உருவாக்கியுள்ளது. சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், முகமது அசாருதீன், சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட், வீரேந்தர் சேவாக் ,விராட் கோலி, மகேந்திரசிங் தோனி என பேட்ஸ்மேன்கள் கொட்டிக்கிடக்கின்றனர்.

Laxman

- Advertisement -

அதேபோல் பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர்கள் அதிகம் .அப்படி ஒரு வேகப்பந்து வீச்சாளர் தான் உமர் குல். இவர் 2003 ஆம் ஆண்டில் இருந்து 2016 ஆம் ஆண்டு வரை பாகிஸ்தான் அணிக்காக விளையாடினார். 47 டெஸ்ட் போட்டிகளிலும், 130 ஒருநாள் போட்டிகளிலும் மற்றும் 60 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.

இந்நிலையில் இந்தியாவில் தனக்கு பிடித்த பேட்ஸ்மேன் யார் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : சச்சின் டெண்டுல்கரை யாருக்குத்தான் பிடிக்காது ? அவர் ஆட்டத்தை பார்த்து கொண்டே இருக்கலாம். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். இன்றைய காலகட்டத்தில் எனக்கு பிடித்த பேட்ஸ்மேன் விராட் கோலி.

கடந்த 5 ஆண்டுகளில் அவர் பேட்டிங் ராஜ நடை போட்டுக்கொண்டிருக்கிறது. வெறும் சாதாரண வீரராக அணியில் வந்தார் தன்னைத்தானே தேவைக்கு ஏற்றவாறு மாற்றிக் கொண்டே இருக்கிறார். குறிப்பாக எங்கள் அணிக்கு எதிராக வித்தியாசமான அணுகுமுறையைக் கையாண்டு வெற்றி பெறுகிறார்.

- Advertisement -

அதனை நான் எப்போதும் ரசித்துப் பார்த்துக் கொண்டிருப்பேன் எந்த அணியாக இருந்தாலும் நன்றாக ஒரு வீரர் விளையாடினால் அவரை அனைவரும் ரசித்து பார்ப்பார்கள். அப்படித்தான் சச்சின் விராட் கோலியும் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார் உமர் குல். இந்திய அணியில் சச்சின் மற்றும் கோலியே சிறந்த வீரர் என்று அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

sachin-kohli

சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டியில் இந்தியாவின் மிகச் சிறந்த பேட்ஸ்மேன். சச்சின் டெண்டுல்கர் தற்போது 100 சதங்கள் என்ற சாதனையை வைத்திருக்கிறார். அதனை விராட் கோலி வெகு சீக்கிரடத்தில் முறியடித்துவிடுவார் தற்போது வரை 71 சதங்கள் அடித்துள்ளார்.

Advertisement