சட்டையை கழற்றி பயிற்சியாளரை அசிங்கப்படுத்திய பாக் வீரர் – தண்டித்த நிர்வாகம்

- Advertisement -

பாகிஸ்தான் அணி பல வருடங்களாக கிரிக்கெட் உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து இருந்தாலும், அந்த அணியின் வீரர்கள் ஒரு தொழில் நேர்த்தியான, உடற்கட்டு வீரர்களைப் போல் இன்றுவரை செயல்பட்டதில்லை. அந்த அணியின் பீல்டிங் எப்போதும் படுமோசமாகவே இருந்து வருவதை நாம் பல ஆண்டுகளாக பார்த்து வருகிறோம்.

umar 2

- Advertisement -

இந்நிலையில் இந்தியாவை பார்த்துவிட்டு அந்த அணி, தனது வீரர்களின் உடல் தகுதியில் கவனம் செலுத்த வேண்டும் என முடிவெடுத்தது. இவ்வாறு முடிவெடுத்துவிட்டு அந்த அணியின் உள்ளூர் வீரர்கள் அனைவருக்கும் சரியான உடல் தகுதி பயிற்சியையும் கொடுத்து வந்தது.

இந்த பயிற்சியில் முன்னாள் வீரர் உமர் அக்மல், அவரும் கலந்துகொண்டு உடற்த்தகுதியை மேம்படுத்தி வந்தார். சரியாக உடற்தகுதி சோதனை வந்தபோது அந்த சோதனையில் தோல்வியும் அடைந்தார் உமர் அக்மல். இதனால் கடுப்பான உமர் அக்மல் சோதனையின்போது உடற்தகுதி பயிற்றுநர்-இடம் கடுமையாக நடந்து கொண்டுள்ளார்.

நீங்கள் சோதனையில் தோல்வி அடைந்து விட்டீர்கள் என்று கூறிய அவரிடம், ‘எனது உடலில் எங்கு கொழுப்பு இருக்கிறது?’ கூறுங்கள்’ என்று தனது ஆடையை கழற்றி காட்டி ஒழுங்கீனமாக நடந்து கொண்டுள்ளார். இது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அவர் மீது தற்போது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

umar

இந்த ஒழுங்கீனமான செயல் காரணமாக உமர் அக்மல் அங்கு அடுத்த ஆண்டு முழுவதும் உள்ளூர் போட்டிகளில் விளையாட தடை செய்யப்பட்டுள்ளது. 31 வயதான உமர் அக்மல் 16 டெஸ்ட் போட்டியிலும், 176 ஒருநாள் போட்டிகளிலும் 84 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement