நீங்க ஆடுன வரைக்கும் போதும். இனிமேல் நீங்க பேட்டை தொடக்கூடாது – பாக் வீரருக்கு தடை விதித்த கிரிக்கெட் வாரியம்

- Advertisement -

பாகிஸ்தான் அணியின் முன்னாள் நட்சத்திர அதிரடி வீரர் உமர் அக்மலை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திடீரென உடனடியாக அனைத்து கிரிக்கெட் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க தற்காலிக தடை விதித்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உமர் அக்மல் கடந்த இரண்டு மூன்று வருடங்களுக்கு மேலாக பாகிஸ்தான் சீனியர் அணியில் இடம் இல்லாமல் தவித்து வருகிறார்.

Umar-Akmal

- Advertisement -

ஆனால் உள்ளூர் போட்டிகளில் நன்றாக ஆடிக் கொண்டிருக்கும் அவர் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். சென்றவருடம் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் விளையாடி கொண்டிருக்கும்போது சூதாட்டக் இடைத் தரகர்களிடம் தொடர்பு வைத்துக் கொண்டும், சூதாட்டம் பற்றிய தகவல்களை பல வீரர்களுக்கு பரிமாறிக் கொண்டும் இருந்தார் என அவர் மீது தற்போது வழக்கு நடைபெற்று வந்தது.

இந்த வழக்கு லண்டன் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அவர் மீது தவறும் நிரூபிக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் இந்த வருடத்திற்கான ஏலம் இன்று நடைபெற்றது. அந்த இடத்தில் குவெட்டா கிளாடியேட்டர் அணிக்காக அவர் தேர்வு செய்யப்பட்டார். இவர் தேர்வு செய்யப்பட்ட அடுத்த சில மணி நேரங்களில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவரை திடீரென சஸ்பெண்ட் செய்து ஆணை பிறப்பித்துள்ளது.

umar

தற்போது 29 வயதாகும் உமர் அக்மல் 16 டெஸ்ட் போட்டிகளிலும் 123 ஒருநாள் போட்டிகளிலும் 84 டி20 போட்டியிலும் பாகிஸ்தான் அணிக்காக விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement