இப்படி கூட பவுன்சர் பந்தை தடுக்கலாமா ? என்ன அநியாயம் பன்றிங்கடா நீங்க – வைரல் வீடியோ

Cri
- Advertisement -

கிரிக்கெட்டில் கடந்த ஒரு வாரமாக விவாத செய்தியாக இடம் பெற்று வருவது ஆர்ச்சர் வீசிய பவுன்சர் பந்தில் ஸ்மித் அடிபட்டது தான். ஆர்ச்சர் வீசிய பவுன்சரில் பின் கழுத்து பகுதியில் அடிபட்டு ஸ்மித் வெளியேறினார்.

- Advertisement -

இந்நிலையில் இங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி கிரிக்கெட்டில் ஒரு வித்தியாசமான நிகழ்வு அரங்கேறியுள்ளது. அது யாதெனில் கவுண்டி கிரிக்கெட்டின் போது ஒரு பவுலர் வீசிய பவுன்சர் பந்தை எதிர் அணியின் பேட்ஸ்மேன் எதிர்கொண்ட விதம் கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

அதன்படி பேட்ஸ்மேன் பவுன்சர் பந்தை பேட்டால் விளையாடாமல் ஹெல்மெட்டால் குனிந்து பந்தை முட்டி ஸ்லிப் திசைக்கு அனுப்பினார். இந்த வினோதமான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த வீடியோவை ரசிகர்கள் பலரும் பகிர்ந்து என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement