ஒரு மணி நேரத்துக்கு மேல் மாஸ் காட்ட முடியாமல் அடங்கிய பாகிஸ்தான்.. இந்தியாவை எதிர்த்ததில் முடிவு

PAK vs UAE
- Advertisement -

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான்
அணிக்கு இந்திய அணி கைகொடுக்காமல் வெளியேறியது சர்ச்சையை உண்டாக்கியது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் நடத்திய தாக்குதலில் 26 இந்திய சுற்றுலாப் பயணிகள் இயற்கை எய்தினர். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாகிஸ்தான் அணிக்கு டாஸ் வீசிய போதும், போட்டியின் முடிவிலும் சூரியகுமார் தலைமையிலான இந்திய அணியினர் கை கொடுக்காமல் வெளியேறினர்.

அதனால் ஜென்டில்மேன்களாக கை கொடுக்க வந்த தங்களை புறக்கணித்த இந்திய அணியை பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் கடுமையாக விமர்சித்தனர். மேலும் விளையாட்டுணர்வுக்கு எதிராக நடந்து கொண்ட இந்தியா மீது ஐசிசியில் பாகிஸ்தான் வாரியம் புகார் செய்தது. அத்துடன் டாஸ் வீசுவதற்கு முன்பாக கை கொடுத்துக் கொள்ளாதீர்கள் என்று போட்டி நடுவர் ஆண்டி ஃபைகிராப்ட் தனிப்பட்ட முறையில் இரு அணி கேப்டன்களிடம் கேட்டுக் கொண்டதாக பாகிஸ்தான் வாரியம் குற்றம் சாட்டியது.

- Advertisement -

மாஸ் காட்ட நினைத்து:

எனவே அவரை உடனடியாக நீக்காவிட்டால் ஆசிய கோப்பையிலிருந்து வெளியேறுவோம் என்று ஐசிசியிடம் பாகிஸ்தான் தெரிவித்திருந்தது. அதை ஐசிசி விசாரித்ததில் இரு அணி கேப்டன்களிடமும் கை கொடுக்க வேண்டாம் என்று ஃபைகிராப்ட் சொல்லவில்லை என்பது தெரிந்தது. அதனால் பாகிஸ்தானின் கோரிக்கையை ஐசிசி நிராகரித்து விட்டதாக கிரிக்பஸ் இணையத்தில் நேற்றே செய்தி வெளியானது.

அதே போல போட்டி முடிந்ததும் கை கொடுப்பது கட்டாயம் என்று எம்சிசி விதிமுறை சொல்லாததால் இந்திய அணி மீது ஐசிசி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்த சூழ்நிலையில் செப்டம்பர் 17ஆம் தேதி துபாயில் பாகிஸ்தான் – அமீரகம் அணிகள் மோதிய போட்டி இரவு 8 மணிக்கு துவங்கியது. ஆனால் அப்போட்டியில் விளையாடுவதற்கு பாகிஸ்தான் அணி வீரர்கள் யாருமே வரவில்லை.

- Advertisement -

அடங்கிய பாகிஸ்தான்:

குறிப்பாக தங்கள் கோரிக்கையின் படி ஆண்டி ஃபைகிராப்டை ஆசியக் கோப்பையிலிருந்து நீக்காத ஐசிசி இந்திய கேப்டன் சூரியகுமார் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் ஆசியக் கோப்பையிலிருந்து பாகிஸ்தான் வெளியேற முடிவெடுத்தது. இருப்பினும் அதற்கு முன் இஸ்லாமாபாத் நகரில் பாகிஸ்தான் வாரியத்தின் அவசரக் கூட்டம் நடைபெற்றது.

அதில் இந்தியாவை எதிர்த்து ஆசியக் கோப்பையிலிருந்து விலகினால் ஆசிய கவுன்சிலில் இருந்து கிடைக்க வேண்டிய பங்கு பணம் பாகிஸ்தானுக்கு கிடைக்காமல் லட்சக்கணக்கான டாலர்கள் இழப்பு ஏற்படும். மேலும் ஐசிசி தலைவராக இந்தியாவின் ஜெய் ஷா இருப்பதால் பாகிஸ்தானுக்கு சாதகமாக எதுவும் நடக்காது ஆகிய விஷயங்கள் விவாதிக்கப்பட்டது.

இதையும் படிங்க: அபிஷேக் சர்மா உண்மையிலேயே பெஸ்ட் டி20 ஓப்பனர் தான் காரணத்தை கூறி பாராட்டிய – ஆகாஷ் சோப்ரா

அதனால் வேறு வழியின்றி ஆசியக் கோப்பையில் பாகிஸ்தான் தொடர்ந்து விளையாடும் என்று தலைவர் மோசின் நக்வி ட்விட்டரில் அறிவித்தார். அதைத் தொடர்ந்து ஹோட்டலிலிருந்து கிளம்பிய பாகிஸ்தான் வீரர்கள் துபாய் மைதானத்திற்கு சென்றனர். அதனால் பாகிஸ்தான் – அமீரகம் போட்டி ஒரு மணி நேரம் தாமதமாக அதே ஆண்டி ஃபைகிராப்ட் மேற்பார்வையில் 9 மணிக்கு துவங்கியது. மொத்தத்தில் இந்தியாவுக்கு எதிராக மாஸ் காட்ட நினைத்த பாகிஸ்தான் ஒரு மணி நேரத்திற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாமல் அடங்கியது குறிப்பிடத்தக்கது.

Advertisement