இந்தியாவில் நடத்தாமல் 2014 ஆம் ஆண்டு நடைபெற்றது போல் இந்த நாட்டில் ஐ.பி.எல் தொடரை நடத்தலாம் – பி.சி.சி.ஐ யோசனை

Ganguly
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான வரவேற்பு இந்தியா மட்டுமல்லாது உலக அளவிலும் அதிக அளவு கிடைத்ததால் இந்தத் தொடர் ஆண்டு தோறும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 12 ஆண்டுகள் சிறப்பாக முடிவடைந்த நிலையில் தற்போது பதிமூன்றாவது சீசனாக இந்த ஆண்டு நடைபெற இருந்த இந்த தொடர் கொரோனா வைரஸ் காரணமாக மார்ச் 29 ஆம் தேதியில் இருந்து ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Ipl cup

- Advertisement -

அதனை தொடர்ந்து மீண்டும் ஒரு முறை தள்ளி வைக்கப்பட்ட ஐ.பி.எல் தொடர் தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகம் இருப்பதன் காரணமாக காலவரையறையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பி.சி.சி.ஐ மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனால் திட்டமிட்டபடி இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடர் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு எப்படியாவது ஐபிஎல் தொடரை நடத்த வேண்டும் என்று தீவிரமாக பிசிசிஐ ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பொருளாதார நெருக்கடி ஒருபுறமிருந்தாலும் மக்களின் மன நிலையை மாற்றுவதற்காக இந்த தொடரை நடத்தியே ஆகவேண்டும் என்ற முழு தீவிரத்துடன் பிசிசிஐ ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதன்படி தற்போது இந்த தொடர் செப்டம்பரில் நடத்தப்படலாம் அதுவும் இந்தியாவில் அல்ல வெளிநாடுகளில் நடக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை அடுத்து அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ள செய்தியில் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாலும், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாலும் அடுத்த அறிவிப்பு வரும் வரை இந்த தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்று அறிவித்திருந்தது.

CskvsMi

கிரிக்கெட் போட்டிகளை விட தேசத்தின் பாதுகாப்பு நலனே முக்கியம் என்பதால் பிசிசிஐ மற்றும் ஐபிஎல் அணிகளில் நிர்வாகத்தினர் இந்த முடிவை எடுத்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து தற்போது ஐபிஎல் போட்டியை தங்கள் நாட்டில் நடத்தலாம் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்தது. இந்நிலையில் அதற்கு அடுத்ததாக ஐக்கிய அரபு அமீரகம் பிசிசிஐக்கு போட்டிகளை நடத்த கோரிக்கை விடுத்துள்ளது.

- Advertisement -

இதுகுறித்து பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் கூறுகையில் : ஐபிஎல் போட்டிகளை நடத்த ஐக்கிய அரபு அமீரகம் கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் இப்போதுள்ள சூழ்நிலையில் சர்வதேச அளவில் எங்கும் பயணம் செய்ய முடியாது என்றும் அவர் தெரிவித்து இருந்தார். மேலும் கிரிக்கெட் வீரர்களின் பாதுகாப்புடன் இப்போது அவர்களின் நலமும் இப்போது முக்கியம். இப்போது உலகமே ஸ்தம்பித்து வருகிறது.

csk

எனவே இப்போது எந்த ஒரு முடிவும் எங்களால் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்க முடியாது என்றும் அருண் துமால் கூறினார். ஏற்கனவே இதே போன்று 2014-ம் ஆண்டு இந்தியாவில் பொதுத்தேர்தல் நடைபெற்ற காரணமாக ஐபிஎல் தடை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது பாதி தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் தான் ஐபிஎல் நிர்வாகம் நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் இம்முறையும் அது போன்ற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த வருட உலகக்கோப்பை தொடர் நடைபெறாமல் தள்ளிவைக்கப்பட்டால் இந்த ஆண்டு இறுதியில் ஐ.பி.எல் தொடர் நடைபெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரை எதுவும் உறுதியாகாது என்றும் கூறப்படுகிறது.

Advertisement