போன வருஷம் மாதிரி இல்ல. இந்த வருஷம் வேறமாதிரி களைகட்ட போகும் ஐ.பி.எல் – வெளியான அப்டேட் இதோ

IPL
- Advertisement -

இந்தியாவில் இந்த ஆண்டு ஏப்ரல் 9 ஆம் தேதி துவங்கிய 14வது ஐபிஎல் தொடரானது 29 போட்டிகள் நடைபெற்று முடிந்த வேளையில் வீரர்களுக்கு இடையே பரவிய கொரோனா பாதிப்பு காரணமாக பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. இதன் காரணமாக மீதமுள்ள 31 போட்டிகள் எப்போது நடைபெறும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த வேளையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் எஞ்சியுள்ள போட்டிகள் செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் அக்டோபர் 15-ஆம் தேதி வரை நடைபெறும் என ஏற்கனவே பிசிசிஐ திட்டமிட்டிருந்தது.

Ganguly-ipl

- Advertisement -

அதன்படி தற்போது அனைத்து அணிகளும் ஐக்கிய அரபு அமீரகம் பயணித்து பயிற்சியிலும் ஈடுபட்டு வருகின்றன. திட்டமிட்டபடி இந்த ஐபிஎல் தொடர் நடைபெறும் என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி தற்போது ரசிகர்களின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும் வகையில் ஐக்கிய அரபு அமீரகம் நிர்வாகம் சார்பில் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொரோனா பாதிப்பு காரணமாக மைதானத்தில் ரசிகர்களுக்கு அனுமதி இன்றி போட்டிகள் காலி மைதானத்தில் நடைபெற்றன.

ஆனால் தற்போது நடைபெற இருக்கும் இந்த தொடரில் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரிய பொதுச்செயலாளர் உஸ்மானி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : பிசிசிஐ மற்றும் ஐக்கிய அரபு அமீரக அரசாங்கம் ஆகிய இருதரப்பிலும் நாங்கள் பேசி வருகிறோம்.

Dubai

எங்களை பொறுத்தவரை மக்களின் பாதுகாப்பும், வீரர்களின் பாதுகாப்பும் முக்கியம். ஆனால் தற்போது இங்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு உள்ளதால் இம்முறை ரசிகர்களை அனுமதிக்க நாங்கள் விரும்புகிறோம். இதுகுறித்து அரசாங்க அனுமதியையும் நாங்கள் நாடி உள்ளோம். மேலும் இந்திய கிரிக்கெட் வாரியமும் ரசிகர்களுக்கு மத்தியில் போட்டியை நடத்த விரும்புகிறது.

fans

இதன் காரணமாக நிச்சயம் இந்த ஐபிஎல் தொடரில் ரசிகர்கள் இடம் பெறுவார்கள் என்று அவர் கூறியுள்ளார். இதனால் நிச்சயம் போட்டி சுவாரசியமாக அமைய வாய்ப்பு உள்ளது. அதே போன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசாங்க தரப்பில் இருந்து 60 சதவீத ரசிகர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement