இதெல்லாம் அதிர்ஷ்டத்தால் முடியாது.. ரோஹித், கோலி மறுபடியும் வலுவா கம்பேக் கொடுப்பாங்க.. டைமல் மில்ஸ்

Tymal Mills
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் சுமாராக விளையாடி வருகிறார்கள். குறிப்பாக சமீபத்திய நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா தொடர்களில் இந்தியா அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்தது. அதற்கு அவர்களுடைய சுமாரான பேட்டிங் முக்கிய காரணமாக அமைந்தது. அவர்களுடைய சுமாரான ஆட்டத்தால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முதல் முறையாக தகுதி பெறாமல் இந்தியா வெளியேறியது.

அதன் காரணமாக அவர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற வேண்டும் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் விராட் கோலி, ரோஹித் சர்மா, ஆகியோர் இதுவரை அடித்த ரன்களை அதிர்ஷ்டத்தால் அடித்திருக்க முடியாது என்று முன்னாள் இங்கிலாந்து வீரர் டைமில் மில்ஸ் தெரிவித்துள்ளார். எனவே அவர்கள் மீண்டும் அசத்துவார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

கம்பேக் கொடுங்க:

இது பற்றி மில்ஸ் பேசியது பின்வருமாறு. “விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் தங்களுடைய கேரியரில் அடித்த ரன்களை வெறும் அதிர்ஷ்டத்தால் மட்டும் அடித்திருந்தால் இந்த பெயரை பெற்றிருக்க மாட்டார்கள். அது இந்த விளையாட்டில் விளையாடிய சிறந்த இரண்டு வீரர்களுக்காக கிடைத்த பெயராகும்”

“அவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் மேடு பள்ளங்களை கடந்து வருவதற்கான திறமையை கொண்டுள்ளார்கள். கண்டிப்பாக அவர்கள் தங்களுடைய திறமை மீது நிறைய தன்னம்பிக்கையையும் கொண்டிருப்பார்கள். இதற்கு முன்பும் அவர்கள் இது போன்ற கடினமான காலங்களை கடந்து வந்துள்ளார்கள். எனவே இந்த மோசமான காலங்களை கடந்து எப்படி வர முடியும் என்பது அவர்களுக்கு தெரியும்”

- Advertisement -

இங்கிலாந்து தொடர்:

“அதே சமயம் அடுத்ததாக நடைபெறும் இங்கிலாந்து தொடரில் அவர்கள் அதிகமாக அசத்தக் கூடாது என்று நான் இங்கிலாந்தை சேர்ந்தவராக நம்புகிறேன். இந்த தொடரில் 2 அணிகளும் பெரிய ரன்கள் குவித்தால் நீங்கள் ஆச்சரியப்படாதீர்கள்” என்று கூறினார். அவர் கூறுவது போல விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் சுமார் 10,000 ரன்கள் அடித்துள்ளார்.

இதையும் படிங்க: ஷமி இஸ் பேக்.. 2 தமிழக வீரர்களுடன்.. இங்கிலாந்து டி20 தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணி இதோ

ரோஹித் சர்மாவும் துவக்க வீரராக நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்திய அனுபவத்தைக் கொண்டவர். எனவே அடுத்த இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன் அவர்கள் பார்முக்கு திரும்புவார்கள் என்று நம்பலாம். அதற்கு முன்பாக இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் சொந்த மண்ணில் அவர்கள் விளையாடி ஃபார்முக்கு திரும்ப முயற்சிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement