ஷமி இஸ் பேக்.. 2 தமிழக வீரர்களுடன்.. இங்கிலாந்து டி20 தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணி இதோ

Shami
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை முடித்துக் கொண்டு தாயகம் திரும்பியுள்ளது. அடுத்ததாக இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா விளையாட உள்ளது. இந்நிலையில் அந்த தொடருக்கான இந்திய அணி பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. சூரியகுமார் யாதவ் தலைமை தாங்கும் அந்த அணியில் முகமது ஷமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

2023 உலகக் கோப்பையில் சந்தித்த காயத்துக்காக அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர் கடந்த ஆஸ்திரேலிய தொடர் வரை விளையாடவில்லை. அது இந்திய அணிக்கு பின்னடைவையும் தோல்வியும் கொடுத்தது. அதனால் ரசிகர்கள் பெரிய ஏமாற்றத்தை சந்தித்த நிலையில் தற்போது ஒரு வருடம் கழித்து ஷமி இந்தியாவுக்காக ஒரு வழியாக விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

- Advertisement -

ஷமி இஸ் பேக்:

மற்றபடி அந்த அணியில் ரிஷப் பண்ட், சுப்மன் கில் ஆகியோர் இடம் பெறவில்லை. டி20 கிரிக்கெட்டில் அதிரடியான வேகத்தில் விளையாட தடுமாறுவதால் அவர்கள் இடம் பெறவில்லை என்று சொல்லலாம். அதே சமயம் ஆஸ்திரேலிய தொடரில் அசத்திய ஜெய்ஸ்வாலுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ள நிலையில் நித்திஷ் ரெட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சஞ்சு சாம்சன், துருவ் ஜுரேல் ஆகியோர் விக்கெட் கீப்பர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த அணிக்கு அக்சர் பட்டேல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர்களுடன் துவக்க வீரர் அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா, ரிங்கு சிங் ஆகிய இளம் வீரர்கள் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

- Advertisement -

இந்திய அணி:

அனுபவ வீரர் ஹர்திக் பாண்டியா ஆல்ரவுண்டராக தேர்வாகியுள்ளார். அதே போல சமீபத்திய வங்கதேசம் மற்றும் தென்னாப்பிரிக்க தொடரில் அசத்திய தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி மீண்டும் இத்தொடரில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ரவி பிஸ்னோய் ஸ்பின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் அர்ஷ்தீப் சிங் வேகப்பந்து வீச்சு துறையில் முதன்மை வீரராக தேர்வாகியுள்ளார்.

இதையும் படிங்க: இந்தவொரு விஷயத்தை நம்பாதீங்க.. பிளான்ல எந்தவொரு சேஞ்சும் இல்ல.. சாம்பியன்ஸ் டிராபி குறித்து – பாக் வாரியம் விளக்கம்

இங்கிலாந்து டி20 தொடருக்கான இந்திய அணி: சஞ்சு சாம்சன் (கீப்பர்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சூரியகுமார் யாதவ் (கேப்டன்), ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங், நித்திஷ் ரெட்டி, துருவ் ஜுரேல் (கீப்பர்), அக்சர் பட்டேல், ஹர்ஷித் ராணா, முகமத் ஷமி, வருண் சக்கரவர்த்தி, ரவி பிஸ்னோய், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங்

Advertisement