பும்ரா மாதிரி ஒரு வீரர் எந்த அணிக்கு கிடைச்சாலும் அவங்க லக்கி தான் – பாராட்டி தள்ளிய இங்கிலாந்து வீரர்

Tymal-Mills
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா கடந்த 2016-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 45 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 205 விக்கெட்டுகளையும், 89 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 149 விக்கெட்டுகளையும், 78 டி20 போட்டிகளில் விளையாடி 89 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக கிட்டத்தட்ட 450 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

பும்ரா மாதிரி ஒரு பவுலர் ரொம்ப லக்கி :

சமீபகாலமாகவே தனது ஃபார்மின் உச்சத்தில் இருக்கும் பும்ரா மூன்று வகையான போட்டிகளிலும் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய அவர் 32 விக்கெட்டுகளை கைப்பற்றி தொடர் நாயகன் விருதினையும் வென்று அசத்தியிருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா எந்த அணிக்கு கிடைத்தாலும் அந்த அணி மிகவும் லக்கியான ஒரு அணி என்று இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான டைமல் மில்ஸ் பும்ராவை பாராட்டி சில கருத்துக்களை வெளிப்படையாக பகிர்ந்து இருக்கிறார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : பும்ரா போன்ற ஒரு வீரர் எந்த அணிக்கு கிடைத்தாலும் அவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் தான். ஏனெனில் பும்ராவால் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று வகையான கிரிக்கெட்டிலும் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்த முடியும்.

- Advertisement -

மும்பை இந்தியன்ஸ் அணியில் அவருடன் இணைந்து விளையாடிய போது அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டுள்ளேன். போட்டியின் எந்த சூழலிலும் சிறப்பாக பந்துவீசும் ஒரு பவுலர் என்றால் என்னை பொறுத்தவரை அது பும்ரா தான். அந்த அளவிற்கு அவர் ஒரு மிகச் சிறப்பான பந்துவீச்சாளர்.

இதையும் படிங்க : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் முகமது ஷமி இந்திய அணிக்கு திரும்புவது உறுதி – வெளியான காரணம் இதோ

அவரைப்போன்ற ஒரு பந்துவீச்சாளர் எந்த அணிக்கு கிடைத்தாலும் அந்த அணிக்கு அவர் சொத்தாக மாறுவார். டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகச் சிறப்பாக பந்துவீசும் அவர் தலைசிறந்த பவுலர்களின் பட்டியலில் தற்போதே இணைந்து விட்டார் என டைமல் மில்ஸ் அவரை பாராட்டி பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement